பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் இன்று (30) அமைதியின்மை ஏற்பட்டது.
பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தேரர்கள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை பூலதிஸி நிலையத்திற்கு முன்பாக தேரர்கள் அமைப்பின் ஒன்றியம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்றை ஆரம்பித்தனர்.
மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த வண்ணம் அவர்கள் கதுருவெல நகருக்குச் சென்றனர்.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினரும் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பொலிஸாரின் தலையீட்டில் சமரசப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வைிடுங்கள்…