மதம் மாறி, இஸ்லாம் பெண்ணை இரகசியமாக, மூன்றாவது திருமணம் செய்தது குறித்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இரண்டாவது மகன், யுவன் சங்கர் ராஜா. இவர், இஸ்லாம் மதத்திற்கு மாறி, பெயரை, அப்துல் ஹாலிக் என, மாற்றிக் கொண்டார்.
துபாயில் தொழிலதிபராக உள்ள கீழக்கரை, சதக் நிஷார் மகள் சப்ரூன், 25, என்பவரை திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம், கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்தது.
கீழக்கரை அருகே செங்கழுநீர் ஓடை கிராமத்தில், ஒரு தென்னந்தோப்பு விருந்தினர் மாளிகையில், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. யுவன் சங்கர் ராஜாவுக்கு, இது மூன்றாவது திருமணம். இதுகுறித்து, பேஸ்புக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது,
என் தாய் ஜீவா மரணத்திற்கு பின், வெறுமையை உணர்ந்தேன். மதினாவில் இருந்து கொண்டு வந்த விரிப்பு பாயை, எனக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் கொடுத்தார். மனக்கஷ்டம் ஏற்படும் போது அதில் அமர்ந்து, குரான் படிக்கும் படி கூறினார். அதன்படி செய்த பின், மனதளவில் ஏற்பட்ட மாற்றமே இது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களில், வாழ்க்கை சரிவர அமையாததால், மூன்றாவது திருமணத்திற்கு திரையுலக பிரமுகர்கள் யாரையும் அழைக்காமல், கீழக்கரையில் ரகசியமாக நடத்தி முடித்துள்ளார்.
மணப்பெண்ணின் பெற்றோர், ஜமாஅத் நிர்வாகிகள், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணி, அவரது கணவர் சபரி மற்றும் நெருங்கிய உறவினர் மூவர் என, குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
AThu Ithu Ethu 03-01-15 -Vijay Tv