வடக்கு மக்களுக்காக நாம் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளை தொடா்ந்தும் மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல்ராஜபக்ச.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளா் அங்கஜன் ராமநாதனுடன் சோ்ந்து குடாநாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களைச் சந்தித்த போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடபகுதி மக்களுக்கு எமது அரசாங்கம் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கான வீதிப் புனரமைப்பு திருப்தியான முறையில் நாம் செய்து முடித்துள்ளோம்.
யாழ்ப்பாண மக்களின் கனவாக இருந்த யாழ்- கொழும்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நாமல்ராஜபக்ச மக்களிடம் தெரிவித்துள்ளார்.