டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்துள்ள, பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் துபாயில் 3 ராத்திரிகள் தங்கியுள்ளார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

 suvamy
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறப்பதற்கு முன்பு சுனந்தா தரூருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான மெஹர் தராருக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தராருக்கு ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்புள்ளது என்றும் சுனந்தா தெரிவித்திருந்தார்.

12-1421054448-shasi-taroor-mehar-tharar-600இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறுகையில், தரூர் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய பத்திரிக்கையாளர் தராருடன் மூன்று இரவுகள் தங்கியபோது அவர் மத்திய அமைச்சராக இருந்தார்.

இதுவும் ஊழல் தான் என்று தெரிவித்துள்ளார். சசி தரூர் துபாயில் மெஹர் தராருடன் மூன்று நாட்கள் தங்கியதாக ஒருவர் போலீசில் சாட்சியம் அளித்துள்ளார். அதை மனதில் வைத்து தான் சாமி ட்வீட் செய்துள்ளார்.

Share.
Leave A Reply