நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தின் ஊடாகவே பகைமையை வெற்றிகொள்ள முடியும் என பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் தெரிவிக்கின்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே திருத்தந்தை இதனைக் கூறினார்.
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று முற்பகல் 9 மணிக்கு இத்தாலியின் அலிதாலியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
திருத்தந்தைக்கு விமான நிலையத்தில், அரச மரியாததையுன் கூடிய வரவேற்று அளிக்கப்பட்டது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகதை தந்த பரிசுத்த பாப்பரசரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
தேசிய கீதம் கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து, விசேட வரவேற்பு கீதம் இசைக்கப்பட்டு, பாப்பரசர் மிக பக்தியுடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர் அங்கு வரவேற்புரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வருமாறு தெரிவித்தார்.
அனைத்து சமயங்களும், பொறுமை மற்றும் நல்லிணகத்தை நம்புவதைப் போன்று பல நூற்றாண்டு காலமாக எமது சமயத்துடன் ஒன்றிணைந்து காணப்படுகின்றது.
உலகில் பிரதான இரண்டு சமயங்களான கிறிஸ்தவம் மற்றும் பௌத்தம் ஆகியன எமது நாட்டில் குறிப்பிடத்தக்களவு பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றது.
பரிசுத்த நகர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக நான் அவதானம் செலுத்தவுள்ளேன். இலங்கை மக்களுக்கு பரிசுத்த பாப்பரசரின் ஆசிர்வாதத்தை நான் எதிர்பார்க்கினறேன். எமது மக்களின் சமாதானம், ஒற்றுமை தொடர்பில் உங்களின் மன்றாட்டத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்.
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தை விமான நிலையத்தில் ஆசி வழங்கினார்.
கசப்பான அநீதியின் ஆதிக்கத்தை தோற்கடிப்பது இலகுவானதல்ல. யுத்தத்தால் பகைமை மற்றும் நம்பிக்கையின்மை விட்டுச் செல்லப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் ஒன்றுமை மற்றும் சமாதானம் ஆகிய பண்புகளை வளர்ப்பதன் ஊடாக மாத்திரமே அதனை தோற்கடிக்க முடியும். பழைய காயங்களை பெரிதாக்காது சட்டம், நலம் மற்றும் ஒற்றுமை போன்றே உண்மைகளை பின்தொடர்ந்து சுகப்படுத்தும் செயற்பாடொன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நண்பர்களே, இந்த நாட்டில் நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக பல்வேறு சமயங்கள் சார்ந்த கலாசாங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை நிறைவேற்றுவதை நான் புரிந்துகொண்டுள்ளேன்.
பரிசுத்த பாப்பரசர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியதன் பின்னர், ஆயர்கள் உள்ளிட்ட ஏனையோருக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
தனது இந்த விஜயத்தினை உறுதி செய்யும் வகையில், சர்வதேச விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களின் நினைவேட்டில் திருத்தந்தை கையொப்பமிட்டார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருது திறந்த வாகனத் தொடரணியில் கொழும்பு நகரை பரிசுத்த பாப்பரசர் வந்தடைந்தார்
இதேளவளை பரிசுத்த பாப்பரசர் இன்று பிற்பகல் ஐந்து மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.