பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அயோமா ராஜபக்ஷ ஆகியோரை கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்ததாக, பாப்பரசரின் பேச்சாளர் அருட்தந்தை பெட்ரிக்கோ லம்பேட் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன், பாப்பரசர் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்தவருட இறுதியில் பாப்பரசரை இலங்கைக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.