“சிசிர சாயம் போன சாந்தனியின் வாழ்வில் அன்பு என்ற தூரிகை கொண்டு நிறமூட்ட எண்ணினான். எனவே குடும்பம், பிள்ளை என்ற மதில் சுவர்களையெல்லாம் தாண்டி இருவரும் இளம் தம்பதிகளாக காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர் “

என்னைப் பொறுத்­த­வ­ரையில் அவள் ஒரு இரக்­க­மில்­லா­தவள். காத­லிப்­பதாய் வேஷம் போட்டு என்னை ஏமாற்றி விட்டாள். இவ்­வாறு போலி­யாக நடிப்­பது தான் காதலா?

என்­னி­ட­மி­ருந்து தனக்குத் தேவை­யான அனைத்­தையும் பெற்­றுக்­கொள்ளும் வரை என்­னையே சுற்றிச் சுற்றி வந்தாள். அவளின் தேவைகள் நிறை­வே­றி­ய­வுடன் என்னைக் கைகழுவி விட்டாள்.

அவள் என் காலைச் சுற்­றிய பாம்பைப் போன்­றவள். அது தான் இறு­தியில் என்னைப் பதம் பார்த்து விட்டு சென்று விட்டாள்…

நானும், சாந்­த­னியும் சுமார் ஒரு வருட கால­மாக காத­லித்து வந்தோம். எனினும், அண்­மைக்­கா­ல­மாக நான் அவளின் நடத்தையில் சிறிது மாற்­றத்தை அவ­தா­னித்தேன்.

அதன் பின் அவ­ளுக்கு வேறொரு ஆட­வ­னுடன் தொடர்­பி­ருந்து வரு­வ­தாக பலரின் கதை­களின் மூலம் என் செவி­க­ளுக்கு எட்டி­யது.

இருப்­பினும், நான் அவற்­றை­யெல்லாம் நம்­ப­வில்லை. காரணம், நான் என்னை விட அதி­க­மாக சாந்­த­னியின் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்­த­மையே ஆகும்.

எனினும் என் நம்­பிக்­கையை என் இரு கண்­க­ளாலும் கண்ட காட்சி பொய்­யாக்­கி­யது. ஒரு நாள் நான் வியா­பா­ரத்­துக்­காக சந்­தைக்கு சென்று கொண்­டி­ருந்தேன்.

அப்­போது அந்த வீதி வழியாய் சாந்­தனி வேறொரு ஆணுடன் மோட்டார் சைக்­கிளில் ஏறி எனக்கும் கை காட்டி, அவனை இறுக்­க­மாக அணைத்­த­வாறு சென்றாள்.

அவள் நிழ­லைக்­கூட இன்­னொ­ருவன் தீண்­டக்­கூ­டாது என்று எண்­ணு­பவன் நான். அப்­ப­டி­யி­ருக்க அவள் எப்­படி இன்­னொரு ஆணுடன் செல்­வதை மட்டும் என்னால் பொறுத்­துக்­கொள்ள முடியும். அன்று எனக்கு இருந்த ஆதங்கம் அவள் மீது கடும் கோப­மாக வெளிப்­பட்­டது.

அதன் பின் ஜன­வரி முதலாம் திகதி தம்­புள்ளை சந்தை தொகு­திக்கு நான் வியா­பா­ரத்­துக்­காக வந்­தி­ருந்தேன். புது வருடம் என்­பதால் சந்­தையில் வியா­பாரம் களை கட்­டி­யி­ருந்­தது அப்­போது சாந்­த­னியும் வியா­ப­ரத்­துக்­காக வந்­தி­ருந்தாள்.

எனினும் அவள் என்னை ஒரு பொருட்­டா­கவே மதிக்­க­வில்லை. என்னைக் கண்டும் காணா­தவள் போல் முகத்தை திருப்பிக் கொண்டாள். என்னால் அந்த அவ­மா­னத்தை சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை.

எனவே எனது மன­தி­லி­ருந்த வேதனை, ஆத்­திரம் அவளை துண்டு துண்­டாக வெட்ட வேண்டும் என்ற எண்­ணத்தைத் தோற்று­வித்­தது.  எனவே தான் நான் கத்­தியை எடுத்து அவள் வயிற்றில் என் ஆத்­திரம் தீரும் வரை கண்­ட­படி குத்­தினேன்.

கத்­தியால் அவள் உடலைக் கண்ட துண்­ட­மாகக் கீறினேன். . அவள் வலியால் துடிப்­பதைப் பார்த்து என் மனம் குளிர்ச்சியடைந்­தது. நான் பட்ட அவ­மா­னத்­துக்கு பழி தீர்த்து விட்­ட­தாக ஒரு ஆனந்தம் என்னுள் தோன்­றி­யது.

அந்த இடத்­தி­லேயே உயிர் துடித்து அவள் இறந்து விட்டாள். அதன் பின் அங்­கி­ருந்து தப்­பிக்க முயற்சி செய்யும் போதே பொலி­ஸா­ரிடம் அகப்­பட்டேன்.

” என இந்த ஆண்டு மலர்ந்த முதல் நாளி­லேயே 33 வய­தான பெண் ஒரு­வரின் படு­கொலை தொடர்­பான வழக்கின் சந்­தேக நபரான சிசிர விஜ­ய­ரட்ண பொலிஸ் விசா­ர­ணையில் தனது குற்­றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் பதிவு செய்த வாக்குமூலத்தில் தெரி­வித்தார்.

சந்­தேக நப­ரான சிசிர விஜ­ய­ரட்ண தம்­புள்ளை பிர­தே­சத்தில் காய்­கறி வியா­பாரம் செய்­பவன். . அவனின் கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­தவள் அவனின் காத­லி­யான சாந்­தனி கரு­ணா­நா­யக்க என்ற ஒரு குழந்­தையின் தாயாவாள்.

பொலிஸ் விசா­ர­ணையின் மூலம் தெரி­ய­வந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில், சாந்­தனி திரு­ம­ண­மாகி மூன்று மாதத்திற்குள்ளேயே கண­வனை இழந்து விட்டாள்.

கண­வனை இழக்கும் போது சாந்­தனி மூன்று மாத கர்ப்­ப­வ­தி­யாக இருந்தாள். எனவே, அந்த நிலை­மையில் அவள் மறு­மணம் தொடர்­பாக சிந்­தித்­தி­ருக்­க­வில்லை.

கண­வனின் ஞாப­கமாய் விட்­டுச்­சென்ற தன் வயிற்றில் வளரும் குழந்­தையை நல்ல படி­யாக பெற்று ஆளாக்க வேண்டும் என்பது மட்­டுமே அன்று அவளின் எண்­ண­மாக இருந்­தது. நாட்கள் நக­ரவே கண­வனின் சாயலில் ஒரு ஆண் குழந்தையைப்பெற்­றெ­டுத்தாள்.

சாந்­தனி குழந்­தை­யையும் எடுத்­துக்­கொண்டு சுமார் 15 வரு­டங்­க­ளுக்கு முன் தான் கல்­கி­ரி­யா­கம பிர­தே­சத்தில் வந்து குடி­யேறினாள்.

அதன்பின் பல்­வேறு வாழ்க்கைப் போராட்­டங்­களை சந்­தித்த சாந்­தனி தனது வாழ்­வா­தா­ரத்­துக்­காக பல்­வேறு தொழில்­களை செய்து சலித்­துப்­போக இறு­தி­யாக ஆடைத்­தொ­ழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரிந்த நிலை­யி­லேயே தனி­யாக துணி­களை மலிவான விலையில் வாங்கி சந்­தையில் வியா­பரம் செய்யும் முயற்­சியில் ஈடு­பட்டாள்.

தம்­புள்ள, நாவுல்ல, அப­ரண போன்ற பிர­தே­சங்­களில் ஞாயிற்றுக் கிழ­மை­களில் நடை­பெறும் சந்­தை­க­ளுக்கு சென்று துணிகளை விற்று வீட்டின் செல­வு­க­ளையும், மகனின் பாட­சாலை செல­வு­க­ளையும் சமா­ளித்தாள்.

இவ்­வாறு சந்­தையில் துணி வியா­பரம் செய்யும் போதே காய்­கறி வியா­பா­ரி­யான சிசிர விஜ­ய­ரட்­ணவின் அறி­முகம் கிடைத்தது.

இளம் வய­தி­லேயே கண­வனை இழந்து உணர்­வு­க­ளையும்,ஆசை­க­ளையும் உள்­ளுக்­குள்­ளேயே புதைத்து தனியா­கவே வாழ்க்­கையில் போரா­டி­ய­வ­ளுக்கு சிசி­ரவின் புன்­னகை கலந்த முகம், ஆறு­த­லான பேச்சும், அக்­கறை என்­பன அவளை வெகு­வாக கவர்ந்­தி­ருந்­தது.

சிசிர சாயம் போன சாந்­த­னியின் வாழ்வில் அன்பு என்ற தூரிகை கொண்­டு­மீண்டும் நிற­மூட்ட எண்­ணினான். எனவே குடும்பம், பிள்ளை என்ற மதில் சுவர்­க­ளை­யெல்லாம் தாண்டி இரு­வரும் இளம் தம்­ப­தி­க­ளாக காதல் வானில் சிற­க­டித்துப் பறந்­தனர்.

சாந்­த­னியின் ஒரே மகனும் அச்­ச­ம­யத்தில் கல்வி பொதுத் தரா­தர உயர் தரத்தில் அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள பிர­பல பாட­சா­லையில் கல்வி கற்­றதால் சாந்­த­னிக்கு சிசி­ர­வு­ட­னான காதலைத் தொடர்­வ­தற்கு எவ்­வித தடங்­கலும் இருக்­க­வில்லை.

எனவே இரு­வ­ருமே ஒரு வருட கால­மாக காத­லித்து வந்­தார்கள். சிசிர சாந்­த­னியின் சந்­தோ­ஷத்­திற்­காக எதையும் செய்யத் துணிந்­த­வ­னாக இருந்தான்.

சிசிர காட்­டிய வழி­காட்­டு­த­லிலும், உத­வி­யிலும் அந்த ஒரு வருட காலப்­ப­கு­தியில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் பாரிய முன்னேற்­றத்தை எட்­டினாள் சாந்­தனி.

அது மட்­டு­மின்றி, அவளின் குடும்ப செல­வுக்­காக பணம் கொடுப்­பது, வீட்­டுக்­குத்­தே­வை­யான பொருட்­களை வாங்கிக்கொடுப்பது என அவனின் உத­விகள் நீண்­டு­கொண்டே சென்­றன.

அதனால் தான் அவனை விட்டு விலகிச் செல்­வ­தற்கு எந்தவித கார­ணங்­க­ளையும் அவளால் முன் வைக்க முடிய வில்லை.

இந்த நிலையில் சாந்­த­னியின் கொலை தொடர்­பான தகவல் ஜன­வரி முதலாம் ஆம் திகதி தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையின் மூலமே பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்­றது.

வைத்­தி­ய­சாலை நிர்­வாக அதி­கா­ரிகள் பொலி­ஸா­ருக்கு கத்திக் குத்­துக்கு இலக்­கான நிலையில் பெண்ணொ­ருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும், அவரை பரி­சோ­தித்­ததில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அறி­வித்­தனர்.

அதைத் தொடர்ந்து மேற்­படி கொலை தொடர்­பாக தனது விசா­ர­ணை­க­ளுக்­காக தம்­புள்ள பொலிஸ் மா அதி­பரின் அறிவுரையின்படி தம்­புள்ள குற்­றப்­பி­ரி­வைச்­சேர்ந்த பொலிஸ் அதி­கா­ரி­களை கொண்ட குழு­வினர் தம்­புள்ளை சந்தைத் தொகு­தியை சோத­னை­யி­டு­வ­தற்­காக சென்­றனர்.

அவ்­வாறு நடத்­திய சோத­னையின் போது சம்­பவ இடத்தில் இரத்­தக்­க­றைகள் காணப்­பட்­ட­துடன், குற்­ற­வாளி அவ்­வி­டத்தை விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­தது.

மேலும் சாந்­த­னியின் உடலை பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­திய போது அவளின் நெஞ்சுப் பகுதி கத்திக் குத்­துக்­குள்­ளா­கிய நிலை­யிலும் , அவளின் மார்­ப­கங்கள் இரண்­டிலும் கத்­தியால் கீறப்­பட்ட காயங்­க­ளையும் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

இதனைத் தொடர்ந்து பிர­தே­ச­வா­சி­களின் உத­வி­யுடன் சந்­தேக நப­ரான சிசி­ரவை பொலி­ஸாரால் கைது செய்ய முடிந்­தது. அதனை தொடர்ந்து சிசி­ரவை அழைத்துச் செல்லும்போதே கொலைக்­கான கார­ணத்­தையும், கொலை செய்த முறையினையும் தமது விசா­ர­ணையின் மூலம் பதிவு செய்து கொண்­டனர்.

மேலும் சிசி­ரவின் உடையில் இரத்தக் கறைகள் படிந்­தி­ருந்­தன. அது மாத்­தி­ர­மின்றி, கொலைக்­காக உப­யோ­கித்த கத்­தியை சிசிர தம்­புள்ளை நக­ரத்தில் காணப்­பட்ட மின் தூணுக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்­டியில் வீசி­ய­தா­கவும் தெரி­வித்தான்.

சிசிர ஆத்­தி­ரத்தில் எடுத்த முடி­வினால் நான்கு சுவர்­க­ளுக்குள் அடைக்­கப்­பட்ட சிறைக் கைதி­யானான். காதல் வந்தால் சுனாமியை போல் வாழ்வில் இருக்கும் அனைத்து சந்­தோ­ஷங்­க­ளையும் சுருட்டி எடுத்துக் கொண்டு போய் விடும் என்ற உண்மை தத்­துவம் சிசி­ர­வுக்கு தான் பொருந்தும்.

சாந்­த­னியை பொறுத்­த­வரை கிடைக்­க­வி­ருந்த ஒரு புதிய வாழ்வினை தனது முட்டாள் தனத்தினால் இழந்து விட்டு தன் மகனை அநாதையாக்கி விட்டுச் சென்று விட்டாள்.

கல்வியில் மிகுந்த திறமைசாலியான அவள் மகனின் வாழ்க்கையோ இன்று கேள்விக் குறியாகி விட்டது. இவ்வுலகில் பிறக்கும் போது தந்தையின் முகத்தை காணாத அவன் இன்று தாயையும் இழந்து விட்டு பரிதவிக்கிறான்.

“கிறுக்கல்களாய் இருந்தாலும் அவையும் சித்திரங்களே!

ஏமாற்றங்களாய் இருந்தாலும் அவையும் வாழ்வின் அனுபவங்களே!” என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் இத்தகைய இழப்புகளைத் தவிர்க்கலாம்.

Share.
Leave A Reply