யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பலாலி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ வெற்றி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர்

வடக்கிலுள்ள படையினரை எக்காரணம் கொண்டு குறைப்பதற்கு தயாரில்லையென எனவும் இதேவேளை சுயநல அரசியலுக்காக படையினரை பயன்படுத்தி தேசிய அரசியலுக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விழைவிக்க வேண்டாமெனவும் இதன்போது அவர் கோரியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ‘கடந்த 30 வருடகால யுத்தத்தை தொடர்ந்து தற்போதே நாட்டில் அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி தந்த இராணு வீரர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். நாட்டில் நிரந்தரமான சமாதானம் நிலவ வேண்டுமென்பதே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் எதிர்பார்ப்பாகும்.

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன். இதேவேளை எதிர்வரும் காலங்களில் இராணுவ வீரர்கள் தமது துறைசார் கற்கைநெறியை மேற்கொள்ளவும் உயர்கல்வியை தொடரவும் இராணுவ பயிற்சி நெறிகளை மேற்கொள்ளவும் வழியமைக்கப்படவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் இடைகால வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் விலைகுறைப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு என்பவற்றில் இராணு வீரர்களும் உள்வாங்கப்படுவர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

DSCF2658DSCF2659
DSCF2660DSCF2670DSCF2673 copieDSCF2677DSCF2688-1DSCF2717DSCF2723DSCF2744DSCF2755DSCF2761DSCF2766DSCF2783DSCF2850DSCF2853DSCF2867

 பா.டிலான்_ _

Share.
Leave A Reply