ilakkiyainfo

பிர­தான கட்­சிகள் ஒரு அணியில் போட்­டி­யி­டு­வது சாத்­தி­யமா? (கட்டுரை)

அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பதே தற்­போ­தைய நிலை­மையில் ஆளும் மற்றும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­களின் எண்­ணப்­போக்­காக மாறி­யுள்­ளது.

அதா­வது எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த திகதி ஒன்றில் நாட்டின் பாரா­ளு­மன்றம் கலைக்கப்படுவது என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

ஆனால் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் குறித்­த­வாறு ஏப்ரல் மாதம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு நடத்­தப்­ப­டுமா என்று கேள்வி எழுப்­பு­கின்­ற­வர்­களும் இல்­லாமல் இல்லை.

காரணம் அண்­மையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.க்கள் குழு கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளது.

அதன்­போது எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு தாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தற்­போது காணப்­ப­டு­கின்ற தேசிய அர­சாங்க முறையை வேண்­டு­மென்றால் நீடிப்­ப­தற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்­கு­வ­தாக கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அவ்­வா­றெனின் ஏப்ரல் மாதம் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­த­வேண்­டி­ய­தில்லை என்றும் தாம­த­மாகி தேர்­தலை நடத்தலாம் என்றும் இந்த சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் யோசனை முன்­வைத்­துள்­ளனர்.

தற்­போ­தைய சர்­வ­கட்சி அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப்­ப­குதி நீடிப்­ப­தற்கு தாங்கள் ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதி­ல­ளித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அது குறித்து பரி­சீ­லிக்­கலாம் என்றும் இந்த யோச­னையை எழுத்து­மூலம் தனக்கு முன்­வைக்­கு­மாறும் கூறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­றுமா என்­பதே இங்கு பிர­தா­ன­மாக ஆராயப்படவேண்­டிய விட­ய­மாக உள்­ளது.

சில வாரங்­க­ளுக்கு முன்னர் கேச­ரிக்கு பிரத்­தி­யேக நேர்­காணல் ஒன்றை வழங்­கிய புதிய அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரட்ன பாரா­ளு­மன்­றத்தை ஏப்ரல் 23 ஆம் திக­தியே கலைக்­க­வேண்டும் என்று இல்லை. தேவை எனின் வேறு  தினத்­திலும்  கலைக்­கலாம் என்று கூறி­யி­ருந்தார்.

அவரின் கூற்று இவ்­வாறு அமைந்­தி­ருந்­தது.

கேள்வி: ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ளதே.

பதில்: அப்­ப­டி­யில்லை. பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 23 ஆம் திக­திதான் கலைக்­கப்­ப­ட­வேண்டும் என்று இல்லை. தற்­போது 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கின்றோம். அதன்­படி சரி­யான ஒரு திக­தியில் பாரா­ளு­மன்­றத்தை கலைப்போம். அது 100 நாட்­களின் பின்னர் இடம்­பெறும்””

இவ்­வாறு சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன கூறி­யி­ருந்தார். எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கூட்டணியின் தேர்தல் விஞ்­ஞா­­பனத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

எனவே ஏப்ரல் மாதம் பாரா­ளு­மன்றம் கலைக்­க­ப்­பட்டு ஜூன் மாத ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெறும் என்ற எடு­கோளின் படியே நாட்டின் அர­சியல் களத்தில் அர­சியல் காய் நகர்த்­தப்­ப­டு­கின்­றது.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லா­னது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடை­பெற்­றது. எனவே அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை பாரா­ளு­மன்றம் செயற்­ப­டலாம்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்ற யோச­னைக்கு மக்­களின் ஆணை கிடைத்­துள்­ளது. எனவே மக்­களின் இறை­மையின் பிர­காரம் தேர்தல் நடை­பெறும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது மூன்று மாதங்­களில் பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விக்­கப்­ப­டப்­போ­வது பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மல்ல. மாறாக தேர்­தலில் எவ்­வாறு கட்­சிகள் போட்­டி­யி­டப்­போ­கின்­றன மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் என்ன நடை­பெறப்போகின்­றது என்­பதே அனை­வரும் மனதை போட்டு குழப்பும் விட­ய­மாக மாறி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் 100 நாள் அர­சாங்­க­மா­னது சர்­வ­கட்சி தேசிய அர­சாங்­க­மாக உள்­ளது. அதில் எந்த சிக்­கலும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

எம்­மி­டமே பெரும்­பான்மை பலம் இருக்­கின்­றது என்றும் 24 மணி­நே­ரத்தில் அர­சாங்­கத்தை கலைக்­கலாம் என்று சுதந்­திரக் கட்சி அவ்­வப்­போது சவால் விட்­டாலும் 100 நாள் வேலைத்­திட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­துள்­ளது.

எனவே புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் ஆயுட்­காலம் குறித்து யாரும் குழப்­பிக்­கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை. இந்நிலையில் அதற்கு பின்னர் வரப்­போ­கின்ற நிலை எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பதே கேள்­வி­யாகும்.

தற்­போது எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் எவ்­வாறு போட்­டி­யி­டப்­போ­கின்­றன என்­பது குறித்தே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

  தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்­துடன் இருக்­கின்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி பொதுத் தேர்­தலில் எவ்வாறு போட்­டி­யி­டப்­போ­கின்­றது?

அதா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒரு­மித்து போட்­டி­யிடும் சாத்­தி­யமும் இருப்­ப­தாக தக­வல்கள் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இணைந்து போட்டியிட முடி­யுமா என்­பது குறித்தும் தற்­போது ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

பிர­தான இரண்டு அர­சியல் கட்­சி­களும் இணைந்து ஒரு சின்­னத்தில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா? என்­பது யதார்த்­த­மா­னதா? என்­ப­தனை முதலில் பார்க்­க­வேண்டும்.

இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்­கான யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் ஜனாதி­ப­தியும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பத­விக்கு கொண்­டு­வ­ரு­வதில் பாரிய பங்­க­ளிப்பை செய்­த­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

ஆனால் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் இணைந்து பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் சில செயற்­பாட்டு ரீதியான சிக்­கல்கள் தோன்றும் என்றும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பாக ஆச­னங்­களை பகிர்­வதில் பாரிய சிக்­கல்கள் ஏற்­படும் என்றும் அவர் எதிர்­வு­கூ­றி­யுள்ளார். இரண்டு பிர­தான கட்சிகளும் இணைந்து எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் சூழல் உரு­வாகும் சாத்­தியம் உள்­ள­தாக அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவும் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

“எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அனைத்து கட்­சி­களும் ஒரு கூட்­ட­ணி­யா­கவும் போட்­டி­யி­டலாம். ஆச­னங்­களை பகிர்ந்து போட்­டி­யி­டுவோம். ஒன்­றாக அமர்ந்து செயற்­ப­டலாம். இல்­லா­விடின் பிரிந்து நின்று போட்­டி­யி­டுவோம்.

பின்னர் இணைந்­து­கொள்வோம். நல்ல மனி­தர்­களை மக்கள் தெரிவு செய்­வார்கள்” என்று அமைச்சர் ராஜித சேனா­ரட்ன குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வாறு இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்றில் இணைந்து ஒரு சின்­னத்தில் போட்­டி­யி­டு­மாயின் அது தேர்தல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான தரு­ண­மாக அமையும்.

ஆனால் அந்த யோசனை எந்­த­ளவு தூரம் நடை­மு­றைக்கு வரும் என்­பதும் எந்­த­ள­வுக்கு யதார்த்­த­மா­னது என்­பதும் சிந்திக்கவேண்­டிய விட­ய­மாகும்.

இந்­நி­லையில் இந்த யோசனை தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இது­வரை எந்த கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை.

nimalஇது இவ்­வாறு இருக்க எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா சுதந்­திரக் கட்சி எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்டி அர­சாங்கம் ஒன்றை அமைக்கும் என்று அடிக்­கடி தெரி­வித்­து­வ­ரு­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நாங்கள் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டுவோம்.

நாங்கள் தற்­போதே தேர்­த­லுக்­கான தயார் நட­வ­டிக்­கைகளில் ஈடு­பட ஆரம்­பித்­து­விட்டோம். எனவே நாங்கள் சிறந்த முறையில் தயா­ராகி தேர்­தலில் போட்­டி­யி­டுவோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா தெரி­வித்­துள்ளார்.

நிமால் சிறி­பால டி. சில்­வாவின் கருத்தைப் பார்க்­கும்­போது பிர­தான இரண்டு கட்­சி­களும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தலில் இணைந்து போட்­டி­யிட முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அவ்­வா­றான யோச­னை­யா­னது யோசனை மட்­டத்­தி­லேயே முடங்­கி­விடும் என்று எண்ணத் தோன்­று­கின்­றது. இதே­வேளை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு தயா­ராகும் பணியில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கடு­மை­யாக ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது.

இந்த விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கடின உழைப்பு தேவைப்­ப­டு­கின்­றது. காரணம் 100 நாள் வேலைத்­திட்­டத்­தையும் மேற்­கொண்டு அர­சாங்­கத்­தையும் கொண்டு நடத்­திய வண்ணம் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் தயா­ரா­க­வேண்­டி­யுள்­ளது. எனவே தான் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கடின உழைப்பு தேவைப்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­கவும் பொதுத் தேர்­தலில் வெற்றிபெறு­வ­தற்­கான பாரிய காய் ந­கர்த்­தலில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றார்.

அவர் இதற்­காக கடந்த காலத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மீண்டும் ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைத்­துக்­கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் தகவல் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியை கிராம மட்­டத்தில் பலப்­ப­டுத்தும் பாரிய முயற்­சி­யிலும் கட்­சி­யினர் தற்­போது ஈடுபட்டுவருகின்­றனர்.

மீண்டும் 10 வரு­டங்­களின் பின்னர் ஆளும் தரப்பில் அமர்­வ­தற்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை நீடிப்­பதே ஐக்­கிய தேசிய கட்சியின் எண்­ண­மாகும்.

அவ்­வா­று­பார்க்­கும்­போது இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தனிவழிப் பய­ணத்தை செல்லவே விரும்­பு­கின்­றமை தெளி­வா­கின்­றது.

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தின்­படி கூடிய ஆச­னங்­களை பெறும் கட்­சிக்கு பிர­தமர் பதவி வழங்­கப்­பட்டு 20 வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அப்­ப­டி­யானால் ஒரு­வேளை சுதந்­திரக் கட்­சிக்கு தேர்­தலில் அதிக ஆச­னங்கள் கிடைத்­து­விட்டால் ரணில் விக்­ர­ம­சிங்க பிரதமர் பத­வியை இழந்­து­வி­டு­வாரா? பல கேள்­வியை எழு­ப்பும் தேர்­த­லா­கவே பாரா­ளு­மன்றத் தேர்தல் காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிட தயா­ரா­கின்ற நிலையில் மற்­று­மொரு புதிய கூட்­டணி தேர்­தலில் கள­மி­றங்க முஸ்­தீ­பு­களை மேற்­கொண்­டுள்­ளன.

அதா­வது மக்கள் ஐக்­கிய முன்­னணி தேசிய சுதந்­திர முன்­னணி, லங்கா சம சமாஜ கட்சி , ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி உள்­ளிட்ட பல கட்­சிகள் இணைந்து பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக தெரிவிக்கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கூட்­ட­ணிக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆத­ர­வையும் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த விடயம் குறித்து மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அதா­வது கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த 57 இலட்சம் மக்­களின் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்­த­வேண்­டி­யது எங்கள் கட­மை­யாகும்.

அத­னால்தான் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் சில கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன் வந்­துள்­ளன.

இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக பிரத­ம­ராக்­கு­வ­தற்­காக இவ்­வாறு நாங்கள் ஒன்­றி­ணைந்து வேலை செய்­கின்றோம் என்று கூறப்­ப­டு­வதில் உண்­மை­யில்லை.

காரணம் எதிர்வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக மீண்டும் களத்­துக்கு வரு­வதா இல்­லையா என்­ப­தனை மஹிந்த ராஜப­க்ஷவே தீர்­மா­னிக்­க­வேண்டும். அதனை நாங்கள் தீர்­மா­னிக்க முடி­யாது என்று தினேஷ் குண­வர்த்­தன குறிப்­பிட்­டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இந்தக் கட்சிகளின் கூட்டணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகிவருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதனை நேரடியாக தெரிவிக்காவிட்டாலும் அதற்கான ஆர்வத்தைக்கொண்டிருப்பதாகவே தெரியவருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, மலையக கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தயார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

கூடிய ஆசனங்களை பெறும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய பிரசார செயற்பாடுகளை தற்போதிருந்தே ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதுவிதமான அரசியல் நிலை ஒன்றை நாம் நாட்டில் பார்க்கலாம்.

ஒருவேளை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிடின் பிரதான இரண்டு கட்சிகளும் அடங்கியவகையில் தேசிய அரசாங்கம் அமையலாம்.

அல்லது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அக்கட்சி தனித்து ஆட்சியமைக்க முற்படலாம். அந்த நேரத்தில் ஜனாதிபதி பதவியினதும் வரையறையற்ற அதிகாரங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் புதுவிதமான சூழலை தோற்றுவிக்கும் என்பதனை எதிர்பார்க்கலாம்.

-ரெபெட் அன்ரணி-

Exit mobile version