சூஃபிக்களில் ஒருவரான சம்சுதீன் இராக்கி காஷ்மீரில் செய்த “அமைதியான” மதமாற்றங்கள் குறித்து தொடர்ந்து காண்போம்.

காஷ்மீரி ஹிந்துக்களின் வாள் முனை மதமாற்றங்களைப் பற்றி  சுல்தான் யூசுப் ஷாவின் (1579-86) அரசவையில் பணிபுரிந்த வரலாற்றாசிரியரான ஹைதர் மாலிக் சவுதுரா அவரது தாரிக்-இ-கஷ்மீர் என்னும் புத்தகத்தில், “ஷேக் சம்சுதீன் இராக்கி காஷ்மீரை வந்தடைந்த பிறகு ஹிந்துக்களின் ஆலயங்களைக் குறிவைத்து இடித்துத் தகர்த்தார்.

அவர்களை (இந்துக்களை) மதம் மாற்றுவது ஒன்றே அவரது நோக்கமாக இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு புத்தகமான தவுஃபத்-உல்-அஹ்தாப், “சம்சுதீன் இராக்கியின் ஆலோசனைப்படி, காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த மாலிக் ராணா ஒவ்வொரு நாளும் குறைந்தது 1500-இலிருந்து 2000 காஃபிர்களை பிடித்துக் கொண்டு வந்து சூஃபி மீர் சம்சுதீனின் வாயிற்படியில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான்.

அவ்வாறு கொண்டுவரப்படும் ஒவ்வொரு இந்துவின் பூணூலும் அறுத்தெரியப்பட்டு, அவர்களுக்கு கெலிமா (இஸ்லாமிய மதமாற்றம்) செய்யப்பட்ட பின்னர், சுன்னத் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்பட்டார்கள்” என்கிறது.

இன்னொரு நூலான தாரிக்-இ-ஹசன் குய்ஹாமி இந்த மதமாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இருபத்தி நான்காயிரம் இந்துக்கள் சம்சுதீன் இராக்கியினால் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்கள்” எனக் கூறுகிறது.

மேற்கூறிய சுல்தான் முகமது ஷாவின் கீழ் பணிபுரிந்த மாலிக் காஜி சக் என்பவன் 1519-ஆம் வருடம் பதவி உயர்வு பெற்று படைத் தளபதியாகிறான்.

அவனை உபயோகித்துக் கொண்ட சம்சுதீன் இராக்கி, “பல ஆயிரம் இந்து காஃபிர்களை காஜி சக்கின் மூலமாகப் படுகொலை புரிந்தான்” என விளக்குகிறது பஹாரிஸ்தானி-இ-ஷாஹி.

மதவெறியனான மாலிக் ராணாவின் காலத்திற்கு முன்னால் ஆண்டவர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பல இந்துக்கள் மீண்டும் தங்களின் தாய் மதத்திற்கே திரும்பியிருந்தார்கள்.

இதனைத் தடுக்க, காஃபிர்கள் குரானின் பிரதிகளைத் தங்களின் ஆசனமாக்கி அதன் மீது அமர்கிறார்கள் என்னும் வதந்தி பரப்பப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட சூஃபி சம்சுதீன் இராக்கி, மாலிக் காஜி சக்கிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடுகிறான்.

“சிலை வழிபாடு செய்யும் இந்த காஃபிர்கள் அமைதி மார்க்கமான இஸ்லாமைத் தழுவிவிட்டு, இப்போது மீண்டும் தங்களின் மதத்திற்கே திரும்பியிருக்கிறார்கள்.

east_india_c_kLQ7xyPp5qaU12இஸ்லாமிய ஷரியா சட்டம் கூறுவதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த காஃபிர்களைத் நீ தண்டிக்காவிட்டால் நான் இந்த நாட்டை விட்டே சென்றுவிடுவேன்” என சூஃபி இராக்கி கூறியதைக் கேட்ட காஜி சக், இந்துக்களைப் படுகொலை செய்யும் முடிவினை எடுக்கிறான்.

இதன்படி 1518-ஆம் வருட முகர்ரம் நாளில் காஜி சக் 800 இந்துக்களைக் கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அன்றைக்கு காஷ்மீரில் முக்கியமானவர்களாக இருந்த பல இந்துக்களும் அடக்கம்.

அதனைத் தொடர்ந்து பெருமளவிலான காஷ்மீரி இந்துக்கள் கூட்டம், கூட்டமாக வாள் முனையில் இஸ்லாமிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இது மாலிக் காஜி சக்கின் பெரும் சாதனைகளில் ஒன்று எனக் குறிப்பிடுகிறது பஹாரிஸ்தான்-இ-ஷாஹி. இந்தக் கொடுஞ்செயலின் பின்னனியில் இருந்து செயல்பட்டவன் சூஃபி சம்சுதீன் இராக்கி என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

syed-ali-shrine-kashmir

காஷ்மீருக்கு வந்த இன்னொரு சூஃபியான சையத் அலி ஹம்தானி (1371-1381), காஷ்மீரை வந்தடைந்ததும் அங்கிருந்த ஒரு இந்துக் கோவிலை இடித்து  அதன் மீது புதிதாக தனது தங்குமிடத்தை அமைத்துக் கொண்டான்.

அப்போது காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் குதுப்-தீன், இஸ்லாமிய சட்டங்களை காஷ்மீரிகளிடம் நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆர்வமும் இல்லாதவனாக இருந்தான்.

சையத் அலி ஹம்தானி வருவகை அதனை முற்றிலுமாக மாற்றியது. இஸ்லாமிய ஆட்சியாளர்களும், மற்ற முஸ்லிம்களும் காஃபிர்களின் நாட்டில் அவர்களின் கலாச்சார முறைப்படி வாழ்வதனைக் குறித்து சூஃபி மிகவும் கோபமுற்றவராக இருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் காஷ்மீரை விட்டு வெளியே சென்றுவிட்டார் எனவும் அறியப்படுகிறது.

பின்னர் குதுப்-தீனின் மகனான, சிலை உடைப்புக்கு பெயர் பெற்ற சிக்கந்தரின் காலாத்தில் வந்த  இன்னொரு   சூஃபியான அமிர் சையத் முகமது காஷ்மீரி இந்துக்களுக்கு பெரும் சாபக்கேடாய் அமைந்தான்.

இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டும், ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு உருக்கப்பட்டும், வாள் முனை மதமாற்றங்களும் தொடர்கதையாகின.

இனி குஜராத்தில் சூஃபிக்கள் செய்த “அமைதி மார்க்க” பணிகளைப் பார்க்கலாம்.

சுல்தான் ஃப்ரோஸ்-ஷா-துக்ளக்கினால் (1351-88) குஜராத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஃபர்ஹத்-உல்-முல்க் மிகவும் மதச் சகிப்புத்தன்மை கொண்டவர்.

சிலை வழிபாட்டையும், இந்துமத கலாச்சாரங்களையும் நசுக்கி அழிக்காமல் அதனை ஆதரித்த ஒரு விதிவிலக்கான இஸ்லாமிய ஆட்சியாளர்.

அவரது இந்த மனோபாவம் எப்போதும் போல இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும், சூஃபிக்களாலும், உலமாக்களாலும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியது.

எனவே அவர்கள் டெல்லி சுல்தானிடம் ஓடினார்கள். இதுவே தொடர்ந்தால் “அமைதி மார்க்கம்” அழிந்துவிடும் என்றும், எனவே ஃபர்ஹத்-உல்-முல்க் உடனடியாக அதிகாரத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் சுல்தானிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

எனவே, ஃபிரோஸ்-ஷா-துக்ளக், டெல்லியின் சூஃபிக்களை அழைத்துப் பேசி, அவர்களின் யோசனைப்படி முஸாஃபர் கான் என்பவனை குஜராத்தின் கவர்னராக நியமிக்கிறான்.

சூஃபிக்களால் நியமிக்கப்பட்ட இந்த முஸாஃபர் கான் உடனடியாக குஜராத்தில் இந்துக்களுக்கு எதிராக தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டான்.

இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களும் செய்த கோவில் இடிப்புகளும், சிலைகள் உடைப்பும், கட்டாய மதமாற்றங்களும் குஜராத்தில் நடைமுறைக்கு வந்தது.

1359-ஆம் வருடம் சோம்நாத்தை நோக்கிச் சென்ற முஸாஃபர் கான், அவன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த அத்தனை இந்துக் கோவில்களையும் இடித்துத் தகர்த்து அவற்றின் மீது மசூதிகளைக் கட்டினான்.

பின்னர் சூஃபிக்களை அந்த மசூதிகளின் பொறுப்பாளர்களாகவும், அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாகவும் நியமித்தான்.

மேற்கூறிய தகவல்கள், இந்து மத சகிப்புத்தன்மை கொண்ட ஆட்சியாளர்களின் மீது சூஃபிக்கள் கொண்டிருந்த வெறுப்பிற்குச் சாட்சியமாக அமைகிறது.

மேலும், முஸாஃபர் கானினால் நியமிக்கப்பட்ட சூஃபிக்கள் அங்கிருந்த அப்பாவி இந்துக்களின் மீது எத்தகைய “சகிப்புத்தன்மை”யுடன் நடந்து கொண்டிருப்பார்கள் என்பதனையும் நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே,

இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்கள் இந்திய, இந்து காஃபிர்களுக்கு எதிராக “புனிதப் போர் (ஜிகாத்)” செய்ய வந்தவர்கள்.

இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் என்பதினை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள்.

காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல? அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது?

எந்த ஒரு நேரத்திலும் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்களின் உண்மையான நோக்கம் அமைதியன மதமாற்றமாக இருக்கவில்லை. அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார்.

ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். படுகொலை செய்யும் இஸ்லாமிய ஆட்சியாளனை ஊக்கப்படுத்தி அவனை மேன்மேலும் கொலைபாதகங்கள் நடத்தத் தூண்டிய சூஃபிக்களே இந்திய வரலாறு முழுமையும் நிறைந்திருக்கிறார்கள்.

எனவே இந்திய முஸ்லிம்கள் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்கள் என்பது அடிப்படையற்ற ஒரு வாதமே.

இனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்று பார்க்கலாம்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்… – 16

வன்முறையே வரலாறாய்… – 15

Share.
Leave A Reply