நடிகை நயன்தாராவுக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து விட்டனராம். அதற்கு நயனும் சம்மதித்துவிட விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதலாவதாக சிம்புவை காதலித்தார். எனினும் சில நாட்களில் அது முறிவடைந்தது.
இதனால் சற்றும் மனந்தளராத நயன் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார்.
மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை பெற்றோர் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர்.
அழகான நடிகைகளின் ‘அழுக்கான’ தோற்றங்கள்!!! (படங்கள்)
தெருவோரக்கடையில் பீர் வாங்கிய நயன்தாரா -(பரபரப்பு வீடியோ)