இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் (முன்னதாக சீன நாட்டவர் என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்ட்டது) சுமார் இலங்கை விமானப்படையி உதவியுடன் 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது அறிந்ததே.

இது பற்று மேலும் தெரிய வருவதாவது,

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற 35 வயதுடைய நபரும் அதே நாட்டைச் சேர்ந்த லின்டா என்ற 31 வயதுடைய பெண்ணும் கடந்த 10.02.2015 அன்று நெதர்லாந்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

worlds-endsதிருமணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்துள்ளனர். இதன் பின்பு வெள்ளிக்கிழமை (20) மாலை நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

பின்னர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும் இவர்களுக்கு வழிகாட்டியாக வந்தவர்களை விட்டு விட்டு உலக முடிவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள் காலை 8.50 மணியளவில் புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில், அதில் மனிதா என்ற நபர் திடிரென கால் தவறி பாதாளத்தில் பின்பறமாக விழுந்துள்ளார்.

இதன்போது, அதிஷ்டவசமாக ஒரு மரத்தில் விழுந்த அவர் அதனை கட்டியணைத்தபடி உயிருக்காக போராடியுள்ளார். பின்பு அங்கிருந்தவர்களால் பொலிஸாருக்கும்  விமானப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த படையினர் பாதாளத்தில் விழுந்த நபரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, நுவரெலியா 03ஆவது சிங்கப்படை பிரிவைச் சேர்ந்த கோப்ரல் சுதேஸ் லலிந்த என்பவர் உயிருக்காக போராடிய நபரை காப்பாற்றியுள்ளார். அவருக்கு பொலிஸாரும் விமானப்படையினரும் உதவி புரிந்துள்ளனர்.

மீட்கப்பட்டவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்போதும் போல அவர்களுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார்கள்.

குறித்த நபர் சுமார் 3 மணித்தியாலயங்களாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தமையும் இதுவரை உலக முடிவில் விழுந்தவர்களில் உயிருடன் மீட்கப்பட்ட முதலாவது நபர் இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply