நுகேகொடைவில் கடந்த புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவுடன் தொலைபேசியில் உரையா டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாரளாக களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு  மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தபோதும் அவர் அதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நுகேகொடை கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக் ஷ வாழ்த்துச் செய்தி ஒன்றைஅனுப்பியிருந்தார். கூட்டத்தின் இடை நடுவில் அந்த செய்தியை தயான் ஜயதிலக்க வாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது ஒருவர் விமல் வீரவன்சவிடம் வந்து தொலைபேசியை கொடுத்து மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் இருப்ப தாக கூறினார்.

தொலைபேசியை பெற்ற விமல் வீரவன்ச மஹிந்த ராஜபக் ஷவிடம் உரையாடினார்.

“” கூட்டம் நன்றாக போகின்றது. நான் இணையம் ஊடாகப் பார்க்கின்றேன் “” என்று மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். “” ஆம் சேர் கூட்டம் நன்றாக உள்ளது “” என்று விமல் வீரவன்ச பதிலுக்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் பின்னர் அழைப்பதாக கூறிவிட்டு மஹிந்த ராஜபக் ஷ தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். இதேவேளை மறுநாள் காலை விமல் வீரவங்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மஹிந்த ராஜபக்ஷ நுகேகொட கூட்டத்தைப் பற்றி கலந்துரை யாடியுள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதி: தேசிய சுதந்திர முன்னணி கூறுகின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பார் என்று தமது கட்சிக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் புதிய அரசு முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவிற்கு பயந்துள்ளமையால் தான் ஐ.நா. விசாரணையை பிற்போட கோரிக்கை விடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

கொழும்பு ஐயந்திரபுர தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கடந்த 19 ஆம் திகதியன்று நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போது தே.சு.மு. வின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது உறுதியென்றும் நுகேகொடையில் சுயவிருப்பத்தோடு திரண்டு நின்ற ஆதரவாளர் களை தாம் ஒரு போதும் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் மக்கள் பலம் உள்ளமையை அறிந்ததால்தான் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்து ஐ.நா. விசாரணை அறிக்கையை பிற்போடச் செய்துள்ளார்.

அத்துடன் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை பெரியதொரு சாதனையாக காண்பிக்க முயற்சி செய்யும் அரசு சர்வதேசத்தின் விஷேட பிரதிநிதிகளுக்கு வடக்கில் அவர்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவும் இடம்கொடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் விசாரணை அறிக்கை மெருகூட்டப்படும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அரசு விசாரணை அறிக்கையை பிற்போடக்காரணம் தேர்தலுக்கு முன்பு அறிக்கை வெளியிடப்படுமாயின் மக்களின் அனுதாபங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே கிடைக்கப்பெறும் என்பதனாலேயே ஆகும்.

மேலும் அவர் ஒரு போதும் யாருடைய காலையும் பிடித்து பிரதமர் வேட்பாளராகப் போவதில்லை பிரபாகரனுக்கு அஞ்சாதவர் நாட்டில் வேறு எவருக்கும் அடிபணிய தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply