மாலைத்தீவின் ஜனநாயக கட்சி தலைவரும்  முன்னாள் ஜனாதிபதியுமான  மொஹமட் நஷீட் விசாரணைகளுக்காக இன்று மாலை  குற்றவியல் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மொஹமட் நஷித்தீன் ஆட்சிக் காலத்தில், குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா மொஹமதுவை  சட்டவிரோதமான முறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தடுத்து வைத்தமை தொடர்பிலும்  பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழும் ,முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் அவரது சகாக்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், நஷிதை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது ஊடகவியலாளர்கள் அவரை இடைமறைத்து கேள்வி எழுப்ப முற்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் மாலைத்தீவு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இந்த அமளிதுமளியின்  போது அவரின் சட்டை கிழிந்ததுடன், பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவினர் அவரை நீதிமன்றத்திற்குள் இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

எனினும் அவர் தாமாகவே செல்வதாக வற்புறுத்தியுள்ளதாக, மாலைத்தீவு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்ற போது, நஷிடின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியுள்ளதாகவும், அந்தப் பகுதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

m2m1m3

Share.
Leave A Reply