சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமடைவதற்கான காரணத்தை பாராளுமன்றத் தேர்தல்கள் வருவதற்கான காலஎல்லை நெருக்கமடைந்து வரும் சூழ்நிலையுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

எப்பொழுதாவது தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அந்த வட்டத்திற்குள் சுமந்திரன் குதித்துவிடுவார், ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் இறுதிவரை அவருக்கு பின்துணை வழங்குவார்கள்.

பாராளுமன்ற தேர்தல்கள்;

வடமராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்களைத் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள கல்வியறிவு மிக்க மிதவாத தமிழர்களும் தங்கள் வாக்கை அவருக்கு செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலுள்ள ரி.என்.ஏயின் வெளிநாட்டுக் கிளைகள் கூட சுமந்திரனின் வேட்பாளர் நியமனத்துக்கு நிச்சயம் உறுதியான ஆதரவை வழங்கும்.

இதன்படி சுமந்திரனது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் அவரது வெற்றியை எதிர்பார்ப்பதால் அவர்களுக்குப் பயம் இருக்கும்.

இந்த நிலமையுடன் சேர்த்து அரசியல் அடிவானில் அமைச்சர் பதவிக்கான சாத்தியக்கூறுகளும் பெரிய அளவில் நெய்யப்பட்டு வருகிறது.

ரி.என்.ஏ க்கு பொதுவாக அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப் பதவிக்கான வாய்ப்பு திறக்கப்பட்டு உள்ளதும் மற்றும் குறிப்பாக புதிய சிறிசேன – விக்கிரமசிங்க பகிர்ந்தளிப்பில் சுமந்திரனுக்கு வாய்ப்பு உள்ளதும் ரி.என்.ஏ வட்டாரத்தில் ஒரு அறியப்பட்ட இரகசியம்.

ஒன்றில் ரி.என்.ஏவோ அல்லது சுமந்திரனோ   இந்த சூழலில் ஒரு அரசாங்கத்துடன் இணைவதை விரும்பவில்லை. எனினும் புதிதாக நடைபெறும்   தேர்தலுக்குப் பின்னர் அமையும் தேசிய அரசாங்கத்தில் ரி.என்.ஏ இணைவதற்கும் அமைச்சர் பதவியை ஏற்பதற்குமான நிகழ்தகவு இல்லாமலில்லை.

எனினும் இதில் பல காரணிகள் தங்கியுள்ளன, மற்றும் இந்த நேரத்தில் அதன் சாத்தியங்களைப் பற்றி ஊகம் பண்ணுவது குறைப் பிரசவத்துக்கு ஒப்பானது.

குறிப்பிடுவதற்கு முக்கியமானது புதிய அரசாங்கத்துடன் ரி.என்.ஏ பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை ஏற்றுக் கொள்ளுவார்களா என்கிற ஆவல் தமிழ் சமூகத்தின் இரண்டு பிரிவுகளை பெரிதும் வாட்டி வருகிறது.

பெரிய பிரிவில் தமிழ் தீவிரவாதிகள் மற்றும் எந்தவித சமரசத்தையோ அல்லது நல்லிணக்கத்தையோ விரும்பாத கடும் போக்காளர்கள் உள்ளனர்.

அவர்கள் குறிப்பாக ரி.என்.ஏ மத்திய அரசுடன் ஒரு பகுதியாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அடியோடு வெறுக்கிறார்கள்.

அடுத்ததாக உள்ள சிறிய பகுதியினரில் உள்ளவர்கள், தனிப்பட்ட ரீதியில் சுமந்திரனை எதிர்ப்பதுடன் மற்றும் குறைந்தளவு சம்பந்தன் மீதும் வெறுப்புக் கொண்டவர்கள்.

தற்சமயம் இந்த இரண்டு பிரிவினரிடத்தும் ஒருங்கிணைந்த ஆர்வம் உள்ளதுடன் தந்திர பூர்வமான கூட்டணியும் உருவாகியுள்ளது.

imagesசி.வி. விக்னேஸ்வரன்

அத்தகைய தெளிவான அடையாளத்துக்கான இணைப்பு, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்;களால் வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வடக்கு மாகாணசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தவறான ஆலோசனை வழங்கும் தமிழர்களின் இனப் படுகொலை பற்றிய தீர்மானம்.

இந்த சர்ச்சைக்குரிய தீர்மானத்தின் பின்னணி மற்றும் அதன் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கான விக்னேஸ்வரனின் பங்களிப்பு என்பன பற்றி எதிர்காலத்தில் எழுதப்படும் கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.

இப்போதைக்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்த இனப்படுகொலை தீர்மானம், இந்த வருட ஆரம்பத்திலிருந்து புதிய அரசாங்கத்துக்கும் மற்றும் ரி.என்.ஏக்கும் இடையில் நிலவி வரும் சுமுகமான உறவுக்கு நஞ்சூட்டியுள்ளது என்பதை.

விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரலுக்கு பல பரிமாணங்கள் உள்ளன மற்றும் அத்தகைய ஒரு நோக்கம் என்னவென்றால் அரசாங்கத்துக்கும் மற்றும் ரி.என்.ஏக்கும் இடையில் உள்ள கூடுதல் ஒத்துழைப்பை தடுப்பதற்கான முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல்.

இத்தகைய முயற்சிகளின் மேலதிக விரிவாக்கம்தான், அரசாங்கம் – ரி.என்.ஏ இடையேயான இணைப்பை முன்கூட்டியே தடுப்பதற்காக சுமந்திரன் மீது நடத்தப்பட்ட சமீபத்தைய தாக்குதல் சம்பவம்.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை சுமந்திரனிடம் உள்ளதா என்பதுகூட ஒருவருக்கும் தெரியாது ஆனால் அவருக்கு எதிரான வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு வெள்ளவத்தையில் வசிக்கும் கண்ணாடி அணிந்த சட்டத்தரணி யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தை வென்று முன்கதவு வழியாக பாராளுமன்றம் செல்லப் போகிறார் என்பது உறுதியாகத் தெரிந்திருக்கிறது.

அதில் மேலும் எதிர்பார்க்கப்படுவது அடுத்த தேர்தலுக்குப் பின்னர் அவர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராவார் என்பதை. சுமந்திரன் எதிர்ப்பு முகாமுக்கு அவர் ஒரு அவசர உணர்வை வழங்கியுள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம், சுமந்திரன் மீது அழுத்தங்களை அதிகரிக்க வைத்து அரசியலில் தொடர்வதிலிருந்து அவரை அகற்றுவதே ஆகும்.

பலவித முனைகளிலிருந்தும் தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலம் இந்த சக்திகள் தனது எதிர்காலத்தைப் பற்றி அவர் மீள் சிந்தனை செய்யவேண்டும் மற்றும் தனது தெரிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன.

வருமானமுள்ள சட்டப் பயிற்சியுடன் கொழும்பில் தனது குடும்பத்துடன் சௌகரியமாக வாழ்க்கை நடத்தும் ஒருவர் எதற்காக தொடர்ந்தும் கொடும்பாவி எரிப்பு போன்ற சம்பவங்களுடன் தன்னை வெளிக்காட்டி தன்னால் தடுக்க முடியாத விஷயங்களில் ஏன் ஈடுபட வேண்டும்.

என்கிற கொடூரமான தர்க்கம்தான் இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளின் மனங்களை ஆட்டுவிக்கிறது. இந்த கீழ்தரமான தாக்குதல்களின் பின்னாலுள்ள நோக்கம் சுமந்திரன்மீது அழுத்தங்களைச் செலுத்தி அவரை சுயமாகவே அரசியலில் இருந்து விலக வைப்பதுதான்.

OLYMPUS DIGITAL CAMERAதுரோக நிலை வியூகம்

இந்த வியுகத்துக்கு முக்கிய கருவியாக உள்ளது துரோக நிலை மூலோபாயம். சுமந்திரன் பரவலாக துரோகி எனத் தூற்றப்படுகிறார்.

நமது மோசமான கடந்த காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மற்றும் அவரது அபாயகரமான கூட்டாளிகளும் தமிழர்களை ஆட்சி செய்தபோது, செயல்படுத்திய ஒருவகை வழிமுறை, ஒருவரை அரக்கத்தனமாக துரோகி எனச் சித்தரித்து பின்னர் அவரை அழித்தொழிப்பது.

அதிர்ஷ்டவசமாக புலிகளுக்கும் மற்றும் அவர்களது சக பயணிகளுக்கும் தொடர்ந்தும் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடியவில்லை, ஏனெனில் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்காவில் இராணுவ ரீதியாக புலிகளை அழித்து தமிழர்களுக்கு ஒரு பெரிய பரிசினை வழங்கியிருந்தார்.

பிரபாகரனுக்கு பின்னான காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய செயல்பாடாக இருப்பது படுகொலை அல்ல, ஆனால் ஒருவரது குணாதிசயத்தை கொலை செய்வது.

இந்த திட்டம் பாதிக்கப்பட்டவரை துரோகி என இலக்கு வைத்து அவரைக் கொல்லாமல் கொல்வது. உடல் ரீதியாக கொல்ல இயலாவிட்டாலும், இரத்த வேட்கை கொண்ட வெறியர்கள் உருவப்படங்களையும் மற்றும் கொடும்பாவிகளையும் தகனம் செய்து தங்கள் வெறியினை தணித்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்களை இந்த வெளிச்சத்திலேயே பார்க்க வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்த மனக்குறை சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்றியதாக இருந்தது. இப்போது ஸ்ரீலங்கா பற்றிய ஐநா அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தியது என்றாக உள்ளது.

“தாமதிக்க வேண்டாம்” என்பதுதான் கோரிக்கையாக உள்ளது. ஓரவஞ்சனையாக தாமதத்துக்காக ரி.என்.ஏ யினை விமர்சிக்கும் அதே சக்திகள்தான் ஐநா விசாரணை கிடப்பில் போடப்பட்டபோது அந்த விசாரணைக்கு எதிராகவே போராட்டம் நடத்துகின்றன.

என்ன ஒரு முரண்பாடு! அதேபோலத்தான் விக்னேஸ்வரனும் தனது இனப்படுகொலை தீர்மானம், ஐநா அறிக்கையை தாமதிக்க வேண்டாம் என்பதற்கான சமிக்ஞை என்று கூறுகிறார்.

திரும்பவும் எழும் கேள்வி என்னவென்றால் இனப்படுகொலை பற்றிய விசாரணையை நடத்துவதற்காக ஐநா நடவடிக்கைகளை நீட்டிக்க வேண்டாமா? என்பதுதான். அரசியல் பம்மாத்துகளில் தவறான தர்க்கங்கள் எல்லை மீறுகின்றன.

ஜெனிவாவிற்கு வருகை

தமிழ் அரசியலின் பதிவுகளின்படி சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் இன்னும் சிறிது காலத்துக்கு தொடர்ந்து செல்லும் அடையாளம் தெரிகிறது.

அடுத்த கட்டமாக தமிழர்களுக்கு விரைவான நீதி வேண்டி ஜெனிவாவை நோக்கி பலவிதமான தமிழ் தேசிய தேசப்பற்றாளர்களின் வருகை அமையும்.

இந்த நடவடிக்கையில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனது இன்னும் அதிகமான கொடும்பாவிகளும் மற்றும் உருவப்படங்களும் ஜெனிவாவில் வைத்து எரியூட்டப்படும்.

புலிகள் மற்றும் புலிகள் சார்பு ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தையும் மற்றும் ஊhவலத்தையும் வைத்து பெரிய அளவில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக பரவலான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும்.

ஆனால் யதார்த்தம் இதற்கு நேர்மாறானது. இந்த எதிர்ப்புகளும் தீ வைப்பு சம்பவங்களும் பொதுவாக தமிழ் மக்களின் சிந்தனையில் எந்தவித பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக்கூடாது. அதேபோல ரி.என்.ஏ யில் உள்ள நெருங்கிய அணி மற்றும் அதன் பின்னால் உள்ள தீய சக்திகளினால் கொடுக்கப்படும் அழுத்தங்களையும் இந்த இருவரும் வலிமையாக எதிர்த்து நிற்கவேண்டியதும் இன்றிமையாதது ஆகும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share.
Leave A Reply