யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு ஒன்றினையடத்து குறித்த பெண் மீது மற்றொருவர் முறைப்பாடு செயதுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்குவருமாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விசாரணைக்கான கடிதமும் முறைப்பாடு செய்தவரிடமே பொலிஸாரினால் கொடுக்கப்பட்டு சம்பந்தப்ட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.
இறுதிநேரத்தில கிடைத்த அழைப்பையடுத்து குறித்த பெண் நேற்று நண்பகல் 12 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
உரிய நேரத்துக்கு விசாரணைக்காக வருகைதராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணை ஏசியுள்ளார்.
விசாரணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். முறைப்பாடு செய்தவரிடமே அழைப்புக்கான கடிதம் வழங்கப்பட்டமை தவறானது.
அத்துடன் இறுதிநேரத்திலேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்திருந்தது. இதனால்தான் வருகை தருவதற்கு காலதாமதம் சென்றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கதிரையிலிருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் பெண்ணின் தலைமயிரைப் பிடித்திழுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். கதறக்கதற தாக்குதல் நடத்திய பொலிஸார் பெண்ணை சிறைக்கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.