ஸ்ரீரங்கபட்டினம்: ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை, மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்துள்ளார்.

மேலும், ஆற்றில் குளித்துவிட்டு ஒரு மாணவி மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அந்த வாலிபர் படம் பிடித்து உள்ளார்.

அப்போது, இதை அந்த மாணவி எதேச்சையாக பார்த்திருக்கிறார். உடனே அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். அதிர்ச்சியில் அந்த மாணவி போட்ட கூச்சலை, அந்த கிராம மக்களும் மற்ற மாணவிகளும் கேட்டு அங்கு ஓடி வந்திருக்கின்றனர்.

மேலும், கிராம மக்கள் உதவியுடன் ஆபாச படம் எடுத்த அந்த வாலிபரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியும், செருப்பால் அடித்து உதைத்திருக்கின்றனர்.

இதிலும் ஆத்திரம் அடங்காமல், தான் உடை மாற்றியதை படம் பிடித்த வாலிபரை அந்த பெண் தனது கை வலிக்க செருப்பால் அடித்து துவைத்து எடுத்தார்.

அதன்பின், அந்த வாலிபரை அவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார், மேலாபுறா கிராமத்தை சேர்ந்த அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply