“எமது பிள்­ளை­க­ளுக்கு வீடு என்றால் அது எப்­படி இருக்கும் என்றே தெரி­யாது. நாம் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக இவ்­வாறு நிர்க்­க­தி­யான நிலையில் அகதி வாழ்க்கை வாழ்­கிறோம்.

இங்கு வரும் அர­சி­யல்­வா­திகள் தொடக்கம் தொண்டர் ஸ்தாப­னங்கள் வரை பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்கிச் செல்­கி­றார்கள். ஆனால், எது­வுமே நடந்­த­பா­டில்லை.

நாம் விரக்­தியின் உச்­சத்தில் உள்ளோம். எமது குழந்­தைகள் போஷாக்­கற்­ற­வர்­க­ளாக, அடிப்­படை வச­திகள் அற்­ற­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். எம்மை ஆத­ரிக்க எவ­ருமே இல்லை”

இவ்­வாறு வேத­னை­யுடன் கூறு­கி­றார்கள் வவு­னியா பூந்­தோட்ட அகதி முகாமில் (வாடும்) வாழும் அக­திகள்.

இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்குடி­யேற்றம் தொடர்­பிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் தொடர்­பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்­த­வி­த­மான அடிப்­படை வச­தி­களும் இன்றி வாழும் இந்த மக்கள் தொடர்பில் எவ­ரது பார்வையும் படா­தி­ருப்­பது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

1983ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட கல­வரம் கார­ண­மாக மலை­நாட்டில் பல்­வேறு இடங்­களில் இருந்தும் இடம் பெயர்ந்த இந்த மக்­களின் சந்­த­தி­யினர் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்­தனர்.

அன்­றாடம் கூலி வேலை செய்தும், கமம் செய்தும் வாழ்ந்து வந்த இந்த மக்கள் 1996ஆம் ஆண்டு வரையும் சுமார் 13 ஆண்டு காலம் எவ்­வித பிரச்­சி­னையும் இன்றி தங்கள் வாழ்க்­கையை நகர்த்திச் சென்­றனர்.

இந்த நிலையில் தான் 1995 – 1996 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் காலப்­ப­கு­தியில் இப்பிரதே­சத்தில்  மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்கை கார­ண­மாக இவர்கள் அங்­கி­ருந்தும் இடம்­பெ­யர வேண்­டிய இக்­கட்­டான நிலை ஏற்­பட்­டது.

அன்று ஆரம்­பித்த அகதி வாழ்வும் துய­ரமும் இன்­று­வரை தொடர்­க­தை­யா­கவே தொடர்ந்து வரு­வ­தாக ஆதங்­கப்­ப­டு­கின்­றனர் குறித்த மக்கள்.

பூந்­தோட்டம் அகதி முகாமில் தற்­பொ­ழுது 108 குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. இவர்­களை மீள்குடி­யேற்ற நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் அவ்­வாறு எந்­த­வித செயற்­பா­டு­க­ளையும் தம்மால் காண­மு­டி­ய­வில்லை என்று கவலை தெரி­விக்­கின்­றனர் இந்த மக்கள்.

pothdam“பூந்­தோட்டம்” என்­ப­துதான் பெயர். ஆனால் நாம் இங்கு சறு­கு­க­ளாக வாழ்­கிறோம். எம்மை எவ­ருமே கண்­டு­கொள்­வ­தில்லை என்று கூறும் இந்த மக்கள், குறைந்­த­பட்சம் நிம்­ம­தி­யாக அச்­ச­மின்றி வாழும் சூழ­லை­யா­வது எமது பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ப­டுத்­துங்கள் என்று மன்­றா­டு­கின்­றனர்.

வவு­னியா பூந்­தோட்டம் அகதி முகாமில் வாழும் மக்­களைச் சந்­திப்­ப­தற்­காக கடந்த புத­னன்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீடு சார்பில் சென்­றி­ருந்­த­போது அந்த மக்கள் தங்கள் சோகக் கதையை இவ்­வாறு பகிர்ந்து கொண்­டார்கள்.

கண­வன்மார் ஆங்­காங்கே தொழி­லுக்குச் சென்ற நிலையில், அங்­கி­ருந்த இளம் தாய்மார் பலர் தங்கள் ஆதங்­கத்தை பெரும் மன்­றாட்­ட­மாக கொட்டித் தீர்த்­தார்கள்.

அவர்­களில் இளம் தாய் ஒருவர் கூறு­கையில்,

‘எங்கள் பரி­தாப நிலையை எல்­லோரும்  வந்து கேட்டுச் செல்­கி­றார்கள். நாங்­களும் கடந்த 30 வருட கால­மாக எங்கள் துய­ரங்­களைக் கொட்டித் தீர்த்து வரு­கின்றோம்.

ஆனால் எந்­த­வித மாற்­றத்­தையும் காண­மு­டி­ய­வில்லை. எமது பிள்­ளை­க­ளுக்கு வீடு என்றால் எப்­படி இருக்கும் என்றே தெரி­யாது. எந்­த­வித சுக­போ­கங்­க­ளையும் அவர்கள் அனு­ப­வித்­த­தில்லை. குச்­சு­குடில், ஓட்டை வீடு என்று ஆதி­வா­சி­களைப் போன்று நாம் வாழ்­கின்றோம்.

இந்தப் பூந்­தோட்ட முகாமில் சுமார் 6 ஆயிரம் குடும்­பங்கள் வரை முன்னர் இருந்­தார்கள். அவர்கள் படிப்­ப­டி­யாகக் குடியேற்றப்­பட்டு இப்­போது நாம் தான் எஞ்­சி­யுள்ளோம்.

சுமார் 108 குடும்­பங்கள் இங்கு உள்­ளன. ஏலவே இங்­கி­ருந்த அகதி முகாம்கள் எரிந்து போன நிலையில் இருக்கும் கொட்டில்களி­லேயே நாம் வாழ்ந்து வரு­கின்றோம். காற்று, மழை, வெயில் என அனைத்­துக்கும் ஈடு­கொ­டுத்து எமது வாழ்க்கை தொடர்­கி­றது.

poomthdamஉண்­மையில் சொல்­வ­தென்றால், எமது தாத்தா, பாட்­டி­மார்தான் முதலில் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு பகு­திக்கு வந்து குடியே­றி­னார்கள். 83ஆம் ஆண்டு கல­வ­ரத்தைத் தொடர்ந்தே நாம் இங்கு வர நேரிட்­டது.

அப்­போது எனக்கு 3 வய­தி­ருக்கும். இப்­போது 3 வயதில் எனக்கு குழந்­தையும் உள்­ளது. ஆனால் எமது துயர வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி கிட்­ட­வில்லை. இந்த நிலைதான் எங்கள் குழந்­தை­க­ளுக்கும் தொட­ருமோ என்ற அச்சம் காணப்­ப­டு­கின்­றது.

எமக்கு சின்ன அடம்­பனில் காணி வழங்கி குடி­யேற்­று­வ­தாகக் கூறி­னார்கள். அதுவும் வெறும் பேச்­ச­ள­வில்தான். அங்கு அடிப்படை வச­திகள் இல்லை என்று அறி­கிறோம்.

அது­மட்­டு­மல்ல, யானைக்­காடு என்றும் அறி­கின்றோம். இங்கு மாங்­குளம் வரை யானை புகுந்து அட்­ட­காசம் செய்யும் நிலையில் எங்கள் குழந்­தை­க­ளுடன் நாம் எப்­படி வாழ்­வது என்று கொஞ்சம் சிந்­தித்துப் பாருங்­களேன்.

எமக்கு கடந்த இரண்டு வரு­ட­மாக எந்­த­வி­த­மான நிவா­ர­ணமும் இல்லை. அன்­றாட உழைப்பில் கிடைக்கும் வரு­மா­னத்தில் வாழ்­கிறோம்.

வவு­னி­யாவில்  எமக்கு வாக்­கு­ரி­மை­யுள்­ளது. 350 பேர் வரையில் கடந்த தேர்­தலில் வாக்­க­ளித்தோம். எமக்கு குறைந்த பட்சம் சிதம்­ப­ர­பு­ரத்தில் காணி வழங்கி வீட­மைத்துக் கொடுத்தால் பெரும் புண்­ணி­ய­மாக அமையும். அல்­லது எம்மை இந்தியாவுக்கா­வது அனுப்பி வையுங்கள் அது­போதும்.

இவ்­வாறு நாம் அன்­றாடம் அனு­ப­விக்கும் துய­ரத்­தி­லி­ருந்தும் விடு­தலை கிடைக்கும்.

poothdamசொந்த நாட்­டி­லேயே அக­தி­க­ளாக   வாழ்­கிறோம். எம்மைப் பற்றி எவ­ருமே கவ­லைப்­ப­டு­வது கிடை­யாது. எமக்­கான அனைத்து நிவா­ர­ணங்­களும் நிறுத்­தப்­பட்டு விட்­டன.

அவ்­வப்­போது யாரா­வது வந்து பிள்­ளை­க­ளுக்கு அப்­பி­யாசக் கொப்­பி­களை வழங்கி விட்டு சென்று விடு­வார்கள். படுக்கப் பாயோ, குடிக்கக் கோப்­பையோ கூட எமக்­கில்லை.

கடந்த தேர்­தலின் போதும் எமக்குப் பல வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. ஆனால், இது­வரை எது­வுமே நிறை­வே­ற­வில்லை.

எம்மை மீள்­கு­டி­ய­மர்த்­துங்கள். எமக்கு ஒரு துண்டு காணியை வழங்கி வீட­மைக்க உத­வுங்கள் என்று மனி­தா­பி­மானக் கோரிக்­கை­க­ளையே விடுத்து வரு­கின்றோம். ஆனால், அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே இருக்­கின்­றன.

இத­னி­டையே, நாங்கள் மீள்­கு­டி­யேற விருப்பம் கொள்­ள­வில்லை என்றும் இந்த இடத்­தில்தான் இருப்போம் என்றும் அடம்பிடிப்­ப­தா­கவும் அதி­கா­ரிகள் சிலர் கூறு­வ­தாக அறி­கிறோம்.

அது உண்­மைக்கு மாறான தக­வ­லாகும். நாம் பொருத்­த­மான இடத்தில் குடி­யேறி நிம்­ம­தி­யாக வாழவே ஆசைப்­ப­டு­கின்றோம்.

இந்த பூந்­தோட்ட அகதி முகாமை நீங்கள் பார்த்­தாலே புரியும். மல­ச­ல­கூட வச­தியோ, தூய குடி­நீரைப் பெறும் வச­தியோ எதுவுமே கிடை­யாது. பற்றை நிறைந்த காடு­க­ளுக்குள், பூச்சி புழுக்­க­ளுக்கு மத்­தியில் நாங்­களும் ஒரு ஜீவ­னாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

மின்­சார வச­தி­யையும் துண்­டித்து விட்­டார்கள். எமது வாழ்க்கை மாத்­தி­ர­மல்ல, எம்மை சூழ­வுள்ள சூழ­லுமே இருண்­ட­தா­கி­யுள்­ளது. இந்த நிலையை மாற்­று­வது மனி­தா­பி­மா­ன­முள்ள அனை­வ­ரதும் கடமை என்­பதை தாழ்­மை­யுடன் எடுத்துக் கூற விரும்­பு­கின்றோம்.

கடந்த பல தட­வைகள் வவு­னியா கச்­சே­ரியில் இருந்தும் அதி­கா­ரிகள் பலர் வந்து எம்மைச் சந்­தித்து எமக்கு புதிய இடம் வழங்கி குடி­ய­மர்த்­து­வ­தாகக் கூறிச் சென்­றார்கள். ஆனால், எது­வுமே நடந்­தே­ற­வில்லை. சதா துன்­பத்தில் துவண்டு கொண்டிருக்­கின்றோம்,

எமது நிலை­ய­றிந்து உதவ எவரும் முன்­வ­ரு­வார்­க­ளே­யானால் அவர்­க­ளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாகவுள்ளோம். கடந்த கால யுத்­தத்தால் பெரும் பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளா­ன­வர்கள் நாங்கள்.

ஆனால், இன்று நாம் அனை­வ­ராலும் கைவி­டப்­பட்ட மக்­க­ளாக வாழ்­கிறோம். எமது துய­ரங்­களைக் கூறிக் கூறியே விரக்­தி­ய­டைந்து விட்டோம். நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வாழ்வோம் என்றே தெரியாது.

அந்த அளவுக்கு துன்பத்தை அனுபவித்து விட்டோம். இனிவரும் காலத்திலேனும் நாம் நிம்மதியாக இருக்க வழிசெய்யுங்கள். இதற்கு மேல் கூறு­வ­தற்கு எது­வுமே இல்லை.’

இவ்­வாறு பூந்­தோட்ட அகதி முகாமில் வாழும் மக்­களின் சோகக் கதை அமைந்­துள்­ளது. இவர்­களின் வாழ்க்­கையில் ஒளியேற்ற வேண்­டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை யும் மக்கள் பிரதிநிதிகளையும் சார்ந்த தாகும்.

சந்­திப்பு: ஆர்.பிரபா படப்­பி­டிப்பு: எம்.எஸ்.சலீம்

Share.
Leave A Reply