அர்ஜென்டினாவில் ரியாலிட்டி ஷோவுக்காக நடந்த ஷூட்டிங்கின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 பேர் பலியாகினர். டிராப்ட் என்ற டிவி ரியாலிட்டி ஷோவுக்கான ஷூட்டிங் அர்ஜென்டினாவின் வடமேற்கு பகுதியில் நடந்தது.
ஆன்டஸ் மலை அருகே உள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஷூட்டிங் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு ஹெலிகாப்டர்கள் பறந்தன. அப்போது எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அவற்றில் இருந்த 10 பேர் பலியாகினர்.
இரண்டு ஹெலிகாப்டர்களை ஓட்டிய அர்ஜென்டினாவைச் சேர்ந்த விமானிகள் ஜுவான் கார்லோஸ் காஸ்டிலோ, ராபர்டோ அபாடே ஆகியோர் பலியாகினர். பலியானவர்களில் 8 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியானது கவலை அளிப்பதாக அந்நாட்டு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பலியானவர்களில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற கமில் மப்பட், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற வாஸ்டின் ஆகியோரும் அடக்கம்.