ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு அவரின் காதலி எனக் கூறப்­படும் முன்னாள் ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை அலினா கபெ­யோவா மூலம் குழந்தை பிறந்­துள்­ள­தாக உலகின் பல நாடு­களின் ஊடகங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஆனால், இவை முற்­றிலும் வதந்­திகள் என ரஷ்ய ஜனா­தி­பதி புட்­டினின் பேச்­சாளர் ஒருவர் கூறு­கிறார்.

9282_Untitled-15564 வய­தான விளா­டிமிர் புட்டின், தன்­னுடன் 30 வரு­ட­கா­ல­மாக இணைந்து வாழ்ந்த மனைவி லியூட்­மிலாவை விவா­க­ரத்து செய்­வ­தாக 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறி­வித்த பின்னர் அவ­ருக்கும் 31 வய­தான அலி­னா­வுக்கும் காதல் என்ற வதந்­திகள் தீவி­ர­மாக பர­வி­யுள்­ளன.

இவர்கள் ஏற்­கெ­னவே ரக­சி­ய­மாக திரு­மணம் செய்­து­கொண்­ட­தா­கவும் பின்னர் சிலர் தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின், தான் அலினா கபெ­யே­வாவை திரு­மணம் செய்­த­தாக கூறப்­ப­டு­வதை ஏற்­கெ­னவே நிரா­க­ரித்­துள்ளார்.

9282Untitled-15அலி­னாவை தான் காத­லிப்­ப­தாக கூறப்­ப­டு­வ­தையும் அவர் மறுத்­துள்ளார். ஆனால், இவர்கள் குறித்த வதந்­திகள் மேற்­கு­லக ஊடகங்­களில் அடிக்­கடி வெளி­யா­­கின்­றன.

இந்­நி­லையில், சுவிட்­ஸர்­லாந்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில், அலினா கபெ­யோ­வா­வுக்கு குழந்­தை­யொன்று பிறந்­துள்­ள­தாக சுவிட்­ஸர்­லாந்து பத்­தி­ரி­கை­யொன்று கடந்த வாரம் செய்­தி­வெ­ளி­யிட்­டது.

9282_alina-3எலி­னா­வுக்கு உண்­மை­யி­லேயே குழந்தை பிறந்­ததா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆனால், அவ­ருக்கு குழந்தை பிறந்­துள்ளது என மாத்­தி­ர­மல்­லாமல் அது விளா­டிமிர் புட்டின் மூலம் பிறந்த குழந்தை எனவும் வதந்­திகள் பர­வி­யுள்­ளன.

ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் கடந்த 10 நாட்­க­ளாக ரஷ்­யாவில் பகி­ரங்­க­மாக காணப்­ப­டா­த­மையும் இந்த வதந்­தி­க­ளுக்கு வலு சேர்த்­துள்­ளன.

9282_48அலினா மூலம் விளா­டிமிர் புட்­டி­னுக்கு குழந்தை பிறந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­வதை புட்­டினின் பேச்­சாளர் மறுத்­துள்­ளமை குறித்து கருத்து தெரி­வித்த ஒருவர், இத்­த­கைய செய்­திகள் எல்­லா­வற்­றை­யுமே மறுப்­பது ரஷ்­யாவின் வழக்­க­மாக உள்­ளது எனத் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றெ­னினும் மொஸ்கோ நகரில் இன்று நடைபெறவுள்ள கூட்டமொன்றில் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது அவர் குறித்து புதிய தகவல்கள் உண்மையா என்பதற்கும் அவர் பதிலளிக்கக்கூடும்.

Share.
Leave A Reply