தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது.
அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்டு ஒன்றை சன்மானமாக வழங்கி இருந்ததார். குறித்த நிலத்தை அரசுடமையாக்கியதை தொடர்ந்து சூசையின் மனைவி பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு தனக்கு ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறியதாக தெரிய வருகிறது.
விரைந்து செயற்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ்(22) மகள் மதி (23) உட்பட குடும்பத்தினர் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் என சந்தேகிக்கபடுபவர்களால் தொடர்ந்து வரும் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியனதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதே நேரம் சூசையின் மனைவியிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலத்துண்டை மீளவும் ஒப்படைக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ் மகள் மதி உட்பட குடும்பத்தினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை அவர்களை கடற்படையினர் சிறைப்பிடித்து திருமலையில் கடற்படை முகாம் ஒண்றில் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.
முன்னாள் போராளிகளை தீண்டத்தகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துவரும் நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.