வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக முறையொன்றை இலங்கை அரசாங்கம் நேற்று அமுலாக்கியுள்ளது.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களும் இரட்டைப் பிரஜா உரிமைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பெறுவதுடன் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கவும் முடியும்.
அத்துடன் இலங்கையில் தங்கள் சிவில் உரிமையை முழுமையாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் ஒழுங்கு, கிறிஸ்தவ அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரி 250,000 ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறே, துணைவி அல்லது கணவன் ஆகியோர் 50,000 ரூபாவையும் 22 வயதுக்கு குறைவான, மணம் முடிக்காத ஒரு பிள்ளைக்காக 50,000 ரூபாவையும் செலுத்த வேண்டும்.
இதேவேளை, ஜப்பான், மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் இலங்கைக்கான குடியுரிமையை இழந்தே அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மீண்டும் இவர்கள் இலங்கைக்கான குடியுரிமை பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். இவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
எனினும், ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த நாடுகளில் மீண்டும் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளும் போது அந்நாட்டு குடியுரிமை பறிக்கப்பட மாட்டாது.
இதனடிப்படையில் மேற்படி 9 நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்தவாறே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
அவ்வாறில்லையானால் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியிலும் குடிவரவு, குடிய கல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம். அல்லது www.immigration.gov.lk என்ற இணை யத்தள முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலய இரண்டாம்மட்ட உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
2011ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டது.
ஆனால், கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் யாருக்கும் தெரியாமல் வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 350 – 400 இற்கும் மேற்பட்டோர் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை.
எனினும் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜா உரிமை தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்திருந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முதன்முதலில் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சிலர் இரட்டைப் பிரஜாவுரிமை இன்மையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களின் சேவை தொடர்ந்து நாட்டுக்கு தேவை என்பதால் இந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளோம். அரசியல் தராதரம் பாராது, தகுதியா னவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும்.
இதேவேளை, இரட்டைப் பிரஜாவு ரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக நபர் ஒருவர் 55 வயதை பூர்த்தியடைந்திருந்தா லும் இதற்காக விண்ணப்பிக்க முடி யும். அவ்வாறே, தொழில் அடிப்படை யிலும் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
மேலும், இலங்கையில் 25இலட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்கு உரிமையுடை யவராயிருத்தல் அல்லது மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றில் 25 இலட்சம் ரூபாவை மூன்று வருட நிலையான வைப்பில் சேமித்திருத்தல், வெளிநாட்டு வங்கிக் கணக்கில் 25ஆயிரம் அமெரிக்க டொலரை மூன்று வருட நிலையான வைப்பில் வைத்திருத்தல் போன்ற ஏதாவதொன்றை விண்ணப்பதாரி கொண்டிருந்தால் இரட்டைப் பிரஜாவுரி மைக்காக விண்ணப்பிக்க முடியும்.