ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்திருப்பதால் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடியாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினை நியமிக்க வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வாய்ப்பு உள்ளதா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன.
எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.
தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும்.
ஆனாலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய அரசின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியொன்று அவசியமானதே.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்திருப்பதால் பாராளுமன்றில் இவை இரு கட்சிகளுமே ஆளும் தரப்பாகவே நோக்கப்படுகின்றன.
எனவே அடுத்த பெரும்பான்மை கட்சிக்கு பாராளுமன்றின் எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகுதியெனின் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டுமாயின் அதனை யாராலும் தடுக்கவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது.
நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்ட வேண்டுமெனின் அல்லது சகல மக்களுக்கும் உரிமைகள் சம அளவில் வழங்கப்படுவதெனின் தமிழ் சிங்கள பேதமின்றி உரிமைகள் பகிரப்படுவதே நியாயமானது எனவும் குறிப்பிட்டார்.
பார்த்தீங்களா?
புதிய ஆட்சி (நல்லாட்சி) மலர்ந்தபின்பு (2015 ஐனவரி 8க்கு பிற்பாடு…) சிங்களவன் இனவாத சிந்தனையிலிருந்து வெளிவந்துவிட்டான். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டுமென போராடுகின்றான்.
அவர்களுடைய போராட்டம் வெற்றியடையும். உலகம் அவர்களை மதிக்கும், மரியாதை செய்யும்.
ஆனால் பாருங்கோ எங்கட சுயநலவாத தமிழ் அரசியல் வாதிகள் 60வருடத்துக்கு மேலாக இனவாதத்தை கக்கிதான் அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அதில் முக்கியமாக…. கூட்டமைப்பு எம்.பிமார்கள் (சிறிதரன், அரியநேந்திரன்…) தொடர்ச்சியாக இனவாதத்தை கக்கி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எம்.பி பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு “புதிய ஆட்சி” வந்தபின்பும் இனவாதம் பேசுவதை தவிர வேறு எதையும் தமிழர்களுக்கு செய்ததில்லை.
தமிழர்கள் இனவாத சிந்தனையிலிருந்து மீண்டு வந்தால்தான் உலகம் தமிழர்களை மதிக்கும். அல்லாவிட்டால்… தமிழ் சுயநலவாத அரசியல்வாதிகள் கக்கும் இனவாதத்தை செவிமடுத்திக்கொண்டு, அவர்களின் வாழ்க்கையை மட்டும் வளம்படுத்திக்கொண்டு செத்துப்போகவேண்டியதுதான்.