2003 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமாக பிரச்சனைகளைக் கிளப்பி விட்ட டாவின்சி கோட் நாவலை வெளியிட்டார் டான் பிரௌன் என்ற நாவலாசிரியர்.
இந்த புத்தகத்தில் கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய மர்மத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்: அந்த மர்மம் இயேசு கிறிஸ்துவின் திருமணம். இயேசு கிறிஸ்து மகதலேனா மரியாளை மணந்து கொண்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த மேரி மக்தலீன் கிறிஸ்து மதத்தில் திருமணமாகாமல் இணைந்து வாழும் பெண்ணாக கருதப்படுகிறார்.
மேரி மகதலேனாவுடனான உறவின் மூலம் இயேசு கிறிஸ்துவிற்கு ஒரு குழந்தை இருப்பதாகும் அந்நூலில் கூறப்பட்டிருந்தது. இந்த கருத்துக்கள் அனைத்துமே தவறானவை என்று இப்பொழுது சொல்லப்பட்டுள்ளன.

இப்படியொரு வாதம் வெளியே உலவிக் கொண்டிருக்கையில், பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான குறிப்பு மீண்டும் ஒருமுறை உலகைப் புரட்டிப் போட உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைப் பற்றிய உண்மைகளை கொண்டிருந்த இந்த குறிப்புகளை ஆராமெய்க் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்வதற்காக வருடக்கணக்கில் முயன்றிருக்கிறார்கள் பேரி வில்சன் என்ற பேராசிரியரும், சிம்ச்சா ஜேகோபோவிக் என்ற எழுத்தாளரும்.
இந்த மொழிபெயர்ப்புக் குறிப்புகளின் படி இயேசு கிறிஸ்து மேரி மகதலேனாவை திருமணம் செய்து கொண்டு, 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். ‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ என்ற பெயரில் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.

21-1416552737-1-jesus

ஆராமெய்க் மொழிக்குறிப்புக்களின் அடிப்படை வந்த நூல் கி.மு. 570 ஆம் ஆண்டுகளில் ஆராமெய்க் மொழியில் எழுதப்பட்ட குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த குறிப்புகள் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளன.
அதில் எகிப்தின் பாரோ மன்னரால் இயேசு கிறிஸ்துவிற்கும், மேரி மகதலேனாவிற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளன.
இயேசு கிறிஸ்துவின் திருமணம் பற்றிய பரபரப்பூட்டும் செய்திகள் முதல் முறையாக வெளியிடப்படவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்களையும் சற்றே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
21-1416552743-2-marym

லூயிஸ் மார்டின் புத்தகத்தில்… 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்டெர்சியல் துறவியான பீட்டர் வாக்ஸ டி செர்னாய் என்பவர், கதாரிஸ்ட்களின் நம்பிக்கைகளின் படி இயேசு கிறிஸ்து மேரி மகதலேனாவுடன் ஓரளவிற்கு உறவு வைத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
பிரெஞ்சு சமூகவியலாளர் மற்றும் அரசியல்வாதியான லூயிஸ் மார்டின் எழுதிய ‘லெஸ் இவான்ஜைல்ஸ் சான்ஸ் டியூ’ என்ற புத்தகத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், இயேசு கிறிஸ்து நாத்திகராகி விட்டதாகவும், மேரி மகதலேனாவை மணந்து கொண்டு, தெற்கு பிரான்ஸிற்குச் சென்று, ஒரு மகனை பெற்றுக் கொண்டதாகவும் சொல்லியுள்ளார்.

21-1416552751-3-marym

காஷ்மீரி பெண்ணை மணந்தாராம்..!
20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டோனவன் ஜோய்ஸ் எழுதிய ‘தி ஜீசஸ் ஸ்க்ரோல்’ என்ற புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தபந்தங்கள் பற்றியும், மேரி மகதலேனாவுடனான உறவு பற்றியும் நிறைய எழுதியுள்ளார்.
1977 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில், இயேசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்ட்ரியாஸ் ஃபேபர்-கெய்சர் கருத்துப்படி, இயேசு, மோசஸ் மற்றும் வழி தவறிய ஆதிவாசிகள் 10 பேர் ஆகியோர் காஷ்மீருக்கு பயணம் செய்தனர்.
ஆங்கு இயேசு கிறிஸ்து ஒரு காஷ்மீரி பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு, பல குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
இது எப்படி இருக்கு? பின்னர் 1982-ம் ஆண்டில், மைக்கேல் பெய்ஜென்ட், ரிச்சர்ட் லெய் மற்றும் ஹென்றி லிங்கன் ஆகியோர் எழுதிய ‘தி ஹோலி ப்ளட்’ மற்றும் ‘தி ஹோலி ட்ரெயில்’ ஆகிய புத்தகங்களில் இயேசு கிறிஸ்துவின் இரத்த பந்தமாக அவருக்கு ஒரு பெண் உள்ளதாகவும், அந்த பெண் மெரோவின்ஜியன் வம்சத்தில் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருவதாகவும் சொல்லி பிரபலப்படுத்தி விட்டனர்.
21-1416552758-4-lastsupper

தி லாஸ்ட் கோஸ்பெல்’ நூல்
சமீபத்தில் வெளிவந்த ‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ நூலில், அந்த குறிப்புகள் குறியீடுகளாக தரப்பட்டுள்ளதாகவும் மற்றும் மேரி மகதலேனாவை இயேசு திருமணம் செய்து கொண்ட தகவல்கள் பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஜோசப் மற்றும் அவருடைய மனைவியான ஆசெநெத் ஆகியோ பாத்திரங்கள்; இயேசு மற்றும் மேரி மகதலேனாவையே உண்மையில் குறிப்பிடுகின்றன.
மேலும், இயேசுவின் 2 குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ரோமானிய சாம்ராஜ்யத்துடன் இருந்த உறுதியான தொடர்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளன.
‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ என்ற இந்த மொழிபெயர்ப்பானது, பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள  எக்கெலெஸியாஸ்டிகல் ஹிஸ்டரி ஆஃப் ஸக்காரியாஸ் ரெட்டார் என்ற குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஒரு எகிப்திய மடாலயத்திலிருந்து 1847-ல் இங்கிலாந்திற்கு கொண்டு வரப்பட்டு, பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளைப் படித்துப் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதை அவ்வளவு முக்கியமான குறிப்பாகக் கருதவில்லை.

21-1416552767-5-jesus

‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ நூல்
ஆனால், ‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ நூலை எழுதியவர்கள் அந்த குறிப்புகளில் உண்மைகள் பல உள்ளன என்றும், அதை 6 ஆண்டுகளாக படித்தறிந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இயேசு கிறிஸ்து பேசிய சிரியக் என்ற மத்திய கிழக்கு மொழியில் மென்மையான தோலில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகள், பிரிட்டிஷ் மியூசியத்தில் 20 ஆண்டுகளாக இருந்தன.
“இவையென்றும் குறிப்பிடத்தக்கவையல்ல” என்று சொல்லி பெரும்பாலான அறிஞர்கள் இந்த கருத்துக்களை மறுத்துவிட்டனர்.
ஆனால், மேரி மகதலேனா பற்றிய மர்மங்கள் இன்னமும் உயிருடனே உள்ளன. பைபிளில் வரும் முக்கியமான பாத்திரங்களில் ஒருவராகவும் மற்றும் பல்வேறு கருத்துக்களை தன்னைச் சுற்றி உலவ விட்டிருப்பவராகவும் மேரி உள்ளார்.
இந்த கருத்துக்களில் சில அவருக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இவை இன்றும் யூகங்களாகவே உள்ளன.
21-1416552773-6-was-jesus-married

மனதில் அலையை ஏற்படுத்திவிட்டது
இவையெல்லாம் உண்மையோ, பொய்யோ ‘தி லாஸ்ட் கோஸ்பெல்’ நூல் மீண்டும் மக்கள் மனதில் ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாயினும், இயேசு கிறிஸ்து மேரி மகதலேனாவின் திருமணம், அவர்களுடைய குழந்தைகள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க சம்பங்கள் ஆகியவை உலகெங்கும் பல்வேறு வாத, பிரதிவாதங்களை கொண்டு வரும் என்பது உண்மை.

Share.
Leave A Reply