மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கைதான கடை ஊழியர்கள் 4 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே ஆயத்த ஆடை நிறுவனத்தின் மராட்டிய மாநில கிளையில் ஆடை மாற்றிய ஒரு பெண்ணை தனது செல்போனால் ரகசியமாக படம் பிடித்த மேலும் ஒரு ஊழியர் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாராபாய் பார்க் பகுதியில் பேப் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஆயத்த ஆடை கடை உள்ளது.

கடந்த 31-ம் தேதி இந்த கடையில் ஆடை வாங்கிய ஒரு பெண் அதை உடுத்திப் பார்க்க தனியறைக்கு சென்றபோது அந்த கடையின் ஊழியர் ஒருவர் அந்த காட்சியை தனது செல்போன் மூலம் ரகசியமாக படம் பிடிப்பதை அந்தப் பெண் பார்த்து விட்டார்.

அந்த ஊழியரை அவர் விரட்டிச் சென்றபோது, கடையின் ஒதுக்குப்புறமாக சென்ற ஊழியர், தனது செல்போனில் படம் பிடித்து பதிவு செய்த காட்சிகளை உடனடியாக அழித்து விட்டார்.

இது தொடர்பாக அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த கடைக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, புகார் அளித்த பெண் ஆடை மாற்றும் காட்சியை அந்த ஊழியர் ரகசியமாக படம் பிடித்ததும், இதை கண்டு திடுக்கிட்ட அந்தப் பெண் விரட்டுவதை கண்டு அந்த காட்சியை அவர் அழித்த காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தன.

இதனையடுத்து, ஊழியர் பிரகாஷ் ஆனந்தா இஸ்புர்லே என்பவர் கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா: கைதான 4 பேர் ஜாமீனில் விடுவிப்பு!
03-04-2014

பனாஜி: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சென்ற ஷோ ரூம் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கைதான 4 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடைக்கு சென்று சில ஆயத்த ஆடைகளை வாங்கியுள்ளார்.

பின்னர், தனது உடலுக்கு அந்த ஆடை பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காகக் கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார்.

goa smirithiஅப்போது, வெளியே காத்திருந்த அமைச்சரின் உதவியாளர், உடை மாற்றும் அறையைக் குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தார்.

இதனையடுத்து, அறையினுள் இருந்து வெளியே வந்த ஸ்மிரிதி இரானி போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் அக்கடையில் பணிபுரிந்த 4 ஊழியர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று அவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று பிடிபட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனையேற்று, அவர்கள் 4 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

Share.
Leave A Reply