30வருடங்களாக புலம்பெயர் தமிழர்களும், பிரபாகரனும்  சேர்ந்து  நடத்திய தமிழீழ   போராட்டதில்  நமது  தமிழர்களுக்கு  கிடைத்த  அவலங்கள்   (செல்வங்கள்) இவைதான்.

150404164416_lanka_disabled_512x288_bbc_nocreditபோரில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு நீடித்த உதவிகள் வேண்டுமென கோரிக்கை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.

குறிப்பிட்ட அரச உதவிகள் கிடைத்துள்ள போதிலும் மாற்று வலுவுள்ளவர்கள் என அழைக்கப்படுகின்ற அங்கங்களை இழந்தவர்கள், பார்வையிழந்தவர்கள், ஆண்துணையற்ற நிலையில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் என்பவற்றிற்கு, அந்தக் குடும்பங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, நிலைத்து நிற்கக் கூடிய உதவிகள் கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனங்களும் தனியார் பலரும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வல்லமைக்கேற்ற வகையில் வழங்கி வருகின்ற உதவிகளை அவர்கள் நன்றியோடு ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவயவங்களை இழந்தவர்கள் குறிப்பாக கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைத் தயாரித்து வழங்குவதில் பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

இவற்றின் உதவிகளினால், பாதிக்கப்பட்டவர்கள், செயற்கை அவயவங்களைப் பெற்றுக்கொள்ளவும், அவற்றை, காலத்துக்குக் காலம் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு எற்பட்டிருக்கிறது.

150404164559_lankanorth_disabled_512x288_bbc_nocredit(இந்த  பெண்   இந்த  நிலைமைக்கு  தள்ளப்பட்டதற்கு  காரமாணவரான  சரத்பொன்சேகாவுடன் கூட்டமைப்பு  பாராளுமன்ற எம்.பி சிறிதரனுக்கு கோபமில்லையாம.  ஆனால்..  சமாதானத்தை  கொண்டு வந்து   அமைதியை நிலைநாட்டிய  ரணிலுடன் தானம்  அவருக்கு  தீராத கோபமாம்.)

இதற்கிடையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு விசேட கவனம் செலுத்தி உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை ஏற்று, அங்கங்களை இழந்வர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவைகள் குறித்து கவனிப்பதற்கென கிளிநொச்சியில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pirapakaranதலைவர்: நீ  ஏன் பிள்ளை வெளிநாட்டுக்கு போகவில்லை. அங்கு போயிருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?

வன்னிப்பெண்:  நீங்கள்  எங்களை  வன்னியை விட்டு போகவிட்டிருந்தால் நாங்களும் “யாழ்குடாநாட்டு மக்களை” போல்  வெளிநாட்டிற்கு போய் அப்பா, அம்மா, தங்கை, அண்ணா, தம்பி…என     எல்லோரையும்  கூப்பிட்டு  வைத்துக்கொண்டு, உங்களுக்கு   ஒரு  50 பிறாங்  தந்துகொண்டு  “தமிழீழம்”  கேட்டிருப்பமே?

நாங்கள்  வெளிநாட்டிலிருந்திருந்தால்  இப்படியொரு   துன்பமான  நிலைமைக்கு ஆளாகியிருப்போமா?

எங்களை மட்டும்  ஏன் அடைத்துவைதிருந்தீர்கள்?

தலைவர்: வெளிநாட்டிலிருப்பவர்கள்  எல்லோரும் எனக்கு தெரியாமல்  போனவர்கள். என்னுடைய கட்டுப்பாட்டில்  அவங்கள்  இருந்தால்  நான் அவர்களை  நான்  போக விட்டிருப்பேனா?

வன்னிப்பெண்: அவர்கள்தானே வெளிநாடுகளிலிருந்து  தமிழீழம்  வேண்டுமென  கேட்டவர்கள்?  அவங்களை  அழைத்து   நீங்கள்  “தமிழீழ”  போராட்டத்தை  நடத்தியிருக்கலாமே?

தலைவர்: ஜயோ! பிள்ளை.. அவங்கள்  இந்த நாடும் வேண்டாம், ஊரும்  வேண்டாம், வளர்ந்த வீடும் வேண்டாம்  எங்களுக்கு எதுவுமே  வேண்டாம. பிழைப்புதான் முக்கியமென  நாட்டைவிட்டு  ஓடியவங்கள்.

அவங்களின்  கதையைவிடு.        நான்  அவங்களை  “நாய்”க்கும்  மதிப்பதில்லை.

அவங்கள்  பிறந்த வளர்ந்த சொந்த   ஊரை, தாய் தகப்பனை, சொந்த பந்தங்களை  பார்பதற்கே  நான் இங்கு சும்மா விடவில்லை.

மாதாந்தம் எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து  காசுகொடுத்தவர்களுக்கு  தான் அனுமதி வழங்கினான்.  எனது  கையில்  முழுமையாக  “தமிழீழம்”    கிடைத்திருந்தால்  அந்த  கூட்டங்களை  நாட்டுக்குள்யே விட்டிருக்க மாட்டன.

வன்னிப்பெண்: தலைவா!   வெளிநாட்டிலிருப்பவர்களின்  கதையை கேட்டுதான்   கடைசிக்கட்ட போரில் நீங்கள்  ஆமியை எதிர்த்து போராட்டம்  நடத்தாமல்  எங்களை  கூட்டிக்கொண்டு  நந்திக்கடல்வரை  போனதாக  எனக்கு தெரியவருகிறது.

தலைவர்: அட உனக்கும்  அது தெரிந்துவிட்டதா? எங்களிடம் நிறைய ஆயுதங்கள்  இருந்தன.  நிறைய போராளிகள்   இருந்தவர்கள.  முழு  இலங்கையையே  அடித்து பிடித்திருக்கலாம்.

ஆனால்.. வெளிநாட்டில  இருந்தவங்கள் எனக்கு சொன்னாங்கள. அமெரிக்கா எங்கள் சார்பாக இறங்க போகிறது.  ஐ.நா. சபை வந்து   இறங்கினால்  தமிழீழத்தை  இலகுவாக அடைந்துவிடலாம்.

நீங்கள்  வைத்திருக்கும்  ஆயுங்களை  இப்பேதைக்கு  தாட்டு வையுங்கள்.  நீங்கள்  குழப்ப  வேண்டாம்  என்றார்கள்.  நானும்  அவங்கள் சொல்லுவதை நல்லா நம்பிவிட்டன்.

கடைசிக்கட்ட  போரை  நாங்கள்   நடத்துகின்றோம். றோட்டில்  இறங்கி போராடி தமிழீழத்தை வென்று தருகின்றோம் என்றார்கள்.

அதுகள்  வெளிநாட்டிலிருந்து ஆடாத ஆட்டம் எல்லாம்  ஆடிப்பார்த்தார்கள். ஆனால் அந்த   கூட்டங்களை    வெளிநாட்டுக்காரர்கள்  கணக்கில்  எடுக்கமில்லை. மதிக்கவுமில்லை.

வன்னிப்பெண்: வெளிநாட்டுக்காரர்கள்  அவர்களை  மதிக்கவில்வையென்றால்(?) மதியாதார் வீட்டில் (வெளிநாட்டில்) அவர்கள்  ஏன் இருக்கின்றார்கள்?

தலைவர்: வெளிநாட்டில அவங்களுக்கு நல்ல வேலை (கோப்பை கழுவுதல், மலசல கூடம் துப்பரவு செய்தல், வீட்டு வேலை…) கிடைத்திருக்கின்றது.   அதனால்…   அவங்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.

வன்னிப்பெண்:
எனக்கு  இரண்டு கையும் போய்விட்டது பார்த்தீாகளா?

தலைவர்: இப்படியெல்லாம்   சரத்பொன்சேகா   ஈவு, இரக்கம் இல்லாமல்  உங்கள் மீது செல்லடிப்பான்  என நான் நினைக்கவில்லையே  பிள்ளை?

வன்னிப்பெண்:  அவன் இப்படிப்பட்ட  கொடிய செயல்களை  செய்ததற்கு பிரதியுபகாரமாகத்தானே கூட்டமைப்பினர்கள்  கையில்லாத  என்னனைக்கூட சரத்பொன்சேகாவுக்கு  வாக்களிக்க  வைத்தார்கள்.

தலைவர்: அவங்கள் (கூட்டமைப்பினர்கள்)  சரத்பொன்சோகாவைவிட மிகவும்  மோசமான பேர்வழிகள்.   நான் உயிருடன் இருந்திருந்தால்  கட்டாயம் அவங்களுடைய   தலையில் போட்டிருபேன்.

என்ன செய்வது… நான்  இப்போ  உயிருடன்  இல்லையம்மா!

வன்னிப்பெண்: வெளிநாட்டிலிருப்பவர்கள்  தான்  உங்களுக்கு காசுக்கு மேல்  காசு தந்து உங்களை உசுப்பிவிட்டு   இந்த போரை நடத்தியவர்கள். இப்போ  எங்களுக்கு  எந்த  உதவியும்  செய்கிறார்கள்  இல்லை.

நாட்டுக்குவந்து  கள்ளுக்குடித்துக்கொண்டு,  சுதந்திரமாக  ஊர்சுற்றித்   திரிகின்றார்கள்.  நாங்கள் மட்டும்  என்ன பாவம்  செய்தோம்?  நாம் மட்டும்  தான் துன்பத்தை அனுபவிக்கவேண்டுமா?

தலைவர்: நீ எதைபற்றியும்   கவலைப்படாதே. நமக்க துன்பத்தை விழைவித்தவாகள்  உன்னைவிட மோசமான   துன்பத்தில்  சுழன்றுகொண்டிருக்கின்றார்கள் என்பது  உனக்கு தெரியுமா?

வெளிநாட்டிலிருப்பவர்கள்  உயிருடன் வதைபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். விடிய  4 மணிக்கு எழும்பி  வேலைக்கு போய், விழுந்தடித்து சாப்பிட்டு, விழந்தடித்து  ஓடி,  வருத்தத்தோடு   இருமிக்கொண்டு  வேலைக்கு போய்  (வெள்ளைக்காரர்களுக்கு  அடிமைகளாய்)  பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.  நிம்மதி  என்பது  அவர்களின்  வாழ்க்ககையில்  கிடையவே…கிடையாது.

ஒரு சான்  வயிறு  கழுவுவதற்காக.. “சாகும்வரை  வதைபட்டு  எதுவுமே கிடைக்காமல்  இறக்கப்போகின்ற  மனிதர்களை  நினைத்து  நீ கவலைப்படாதே.

வன்னிப்பெண்:  தலைவா நீங்கள்  உயிருடன் இருக்கிறதாக சொல்லுகிறார்களே?

தலைவர்: செத்தவனையே உயிருடன்  இருக்கிறான்   என்று  சொல்லி  பிழைப்பு  நடத்துகிற ஒரு இனம்  என்றால் அது  கேவலம்கெட்ட  தமிழன்தான். இப்படிப்பட்ட  கேடுகெட்டவர்களைப்   பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது?

வன்னிப்பெண்: எங்களை  தப்பி  ஓடவிடாமல்  வைத்திருந்துவிட்டு…  கடைசிக்கட்டப்  போரில் நீங்கள்  ஆமியிடம்  சரணடைந்ததாக  சொல்லுகிறார்களே. அதெப்படி?

தலைவர்: அது நானில்லை. வரட்டுமா…

Share.
Leave A Reply