தமிழகத்தில் முதல் முதலில் ஆளுமையுடன் ஒரு பெண் அரசியல்வாதியாக முழு நேரமாக அரசியலைத் தேர்ந்தெடுத்த ஜெ’யின் யின் வருகை யாருமே எதிர் பார்த்திராதது.
இந்திய நடிகை ஷபானா ஆஸ்மி இந்தியாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்த காலத்தில் அதற்கு எதிராக நின்ற காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
ஆனால் அரசியல் நடவடிக்கைகளில் இவரிடம் இல்லாதது, ஜெயலலிதாவிடம் இருப்பது உணர்ச்சி சார்ந்த அரசியல். திராவிட இயக்கத்தினரும், இந்திய அரசியல்வாதிகளும் உணர்ச்சி சார்ந்த அரசியலில் ஊறியவர்கள்.
அதை சினிமா மூலம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் அறிஞர் அண்ணா முதல் ஜெயலலிதா வரை அனைவருக்கும் அரசியல் படியாக சினிமா அமைந்தது.
உணர்ச்சி பூர்வமாக பேசப்பட்ட வசனங்கள் அமைந்தன., அந்த சினிமா மாயையை கையில் ஏந்தி வளர்ந்தவர்தான் ஜெய’லலிதா.
ஜெயலலிதா முரண்பட்டபோது எம்.ஜி.ஆரும், ஆர்.எம்.வீரப்பனும் லதாவையும், சரோஜாதேவியையும், வெண்ணிற ஆடை நிர்மலாவையும், அ.தி.மு.கவுக்குள் ஜெயலலிதாவுக்குப் போட்டியாகக் கொண்டுவர முயன்றார்கள்.
சம்பந்தப்பட்ட எந்த நடிகைக்கும் ஜெயலலிதா போல ஆளுமையோ , அரசியல் படிப்போ, சிந்தனையோ இருக்கவில்லை.
அதனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி ஜெயின் அரசியல் வாழ்க்கை ஜொலித்தது.எப்படி இந்தியாவுக்கு ஒரு இந்திரா காந்தியோ ஒரு காமராஜரோ , ஒரு எம்.ஜி.யாரோ ஒரு கலைஞர் கருணாநிதியோ அது போல ஒரு ஜெயலலிதாதான்.
இதை மறுக்க யாராலும் முடியாது, கலைஞர் உட்பட. தமிழக அரசியலே உணர்ச்சி அரசியல்தான்.
1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. அதே ஆண்டு ஜூலையில் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது.
ஆரம்பித்தது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை. ஜெ’யின் சினிமாக் கவர்ச்சியும் பேச்சுக் கவர்ச்சியும் அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்தது. மக்களிடம் மட்டுமன்றி எம்.ஜி.ஆருக்கும் மனங் கவர் மங்கையானார்.
கட்சியில் ஜெ’யின் செல்வாக்கு உயர உயர உட்பூசலும் அதிகரித்தது.
1983ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலர் பதவியில் ஜெ’யலலிதாவை எம்.ஜி.ஆர். நியமித்தார். ஆரம்பித்தது உட் கட்சிப்பூசல்.
ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான குழு நடிகர் பாக்யராஜ், , மக்கள் குரல் பத்திரிகை போன்ற ஏவல்களைத் தூண்டி விட்டு ஜெ’யிற்கு எதிரான போட்டிகளைத்தொடக்கியது.
எம்.ஜி.ஆர். கண்டு கொள்ளவில்லை. பிரசார வேன் ஒன்றை பிரத்தியேகமாகத் தந்து ஜெ’யை ஊர் ஊராக அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான் .எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் தர தமிழகத்தை சுற்றிவந்தார். ஜெயின் அரசியல் கொடி ஜே ஜே என்று பறந்தது.உட் பூசல் உயர்ந்தது.
எம்.ஜி.ஆர். யார் பொறாமை பற்றியும் கவலைப்படவில்லை. அவர் காலால் இட்ட பணியை தலையால் செய்த ஜெ’யின் முனைப்பு அவருக்கு பிடித்திருந்தது.
டெல்லி அரசியலுக்குத் தேவையான தகுதிகளான ஜெயின் ஞாபக சக்தி, ஆங்கிலப் புலமை ஆகியவை பேச்சாற்றலுக்குத் துணை போயின.இவையே அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியையும் வாங்கித் தந்தது.
ராஜ்யசபா குழுவில் அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் உயர்ந்த இவரது பேச்சுக்கள் அப்போதைய பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.
ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டியவர் அப்போது வருவாய்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம்.
அவர் வசமிருந்த முக்கியத்துறைகளை பறிக்கப்பட்டன. பின்னாளில் அதே எஸ்.டி.எஸ் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பிடித்தது வரலாறு. பதவி பற்றிய பயத்தில் அமைச்சர்கள் தனக்கு கீழ் இருப்பதையே விரும்பினார்.
இந்த கால கட்டத்தில் எம்.ஜி. ஆருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களுக்கு இடையில் யார் எம்.ஜி ஆரின் அடுத்த அரசியல் வாரிசு என்பதில் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. .
எஸ்.டி.எஸ் சந்தித்த சோதனை மற்றவர்கள் ஜெ’ பற்றி பேசவே அச்சத்தை தந்தது. எம்.ஜி. ஆருக்குக்கும் இந்த அரசியல் விளையாட்டு பிடித்திருந்தது.
ஜெயின் ஆளுமையின் முன் அனைவரும் மிகச் சிறியதாகவே காட்சி அளித்தார்கள். அரசியல் அவருக்கு முழு நேரத் தொழில் என்பதன் அறிவிப்பு 1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது.
வெள்ளி செங்கோல் ஒன்றை எம்.ஜி.ஆருக்கு பரிசளித்து தானே “அரசியல் வாரிசு” என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார் ஜெ. இது அவர் அரசியல் வாதியாக மாறி வந்ததற்கான ஆரம்ப அறிகுறியாகும்.
ஒரு மூத்த பத்திரிகைக்காரர் சட்ட சபையில் வேட்டி கட்டாத ’ஒரே மானமுள்ள ஆண் மகன் ஜெயலலிதா’ தான் என்று கூறியது தமிழக அரசியலில் அதிக பட்ச நகைச்சுவை.
தமிழக அரசியலில் பெண்ணுக்கு செல்வாக்கு, திராவிடர் அல்லாதவர், கன்னட பூர்வீகம்.தொழில் நடிகை. இவை போதாதா, வெறும் வாயை மெல்வோர்க்கு?
ஜெ’யின் சாதி, மொழி , வர்க்கம் , தொழில் இவை யாவுமே கேவலமாக விமர்சிக்கப்பட்டது. பொம்பளை, பாப்பாத்தி, இன்னும் பல கேவலமான அறிமுகங்களுடன் விளிக்கப்பட்டார்.
அவரது கடந்த காலம் கடுமையாக ஒழுக்கம் சார்ந்து விமர்சிக்கப்பட்டது. அரசியல் என்ற பாதாளத்தில் மலர்களை விட முட்களே அதிகம் என்பதை அப்போதிருந்த அரசியல்வாதிகள் உணர்த்தினர். ஆனால் எதற்கும் அசராத ஜெ’யும் வெட்ட வெட்டத் தளைத்தார்.
அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த சோகம் நடந்தது. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் 5_10_1984 இரவு சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தலைப்பகுதியை `எக்ஸ்ரே’ படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது.
ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது என்றும் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஜப்பானில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் மருத்துவர்கள் வந்தார்கள்.
எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட பல மேல்மட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும், உண்ணாவிரதம் இருந்தும் மாண்டனர்.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். அவரை பார்க்க பிரதமர் இந்திரா காந்தியும் வந்தார்.
இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31 , 1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.ராஜீவ் பிரதமர் ஆனார்.
எம்.ஜி.ஆரை சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புரூக்ளின் மருத்துவமனைக்கு, அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடந்தன.
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மறந்தும் கூட ஜெ’யலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.
எம்.ஜி.யார் அமெரிக்காவில் இருந்தபோது தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஜெ’ அரசியலில் தன்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு இது.
வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்