தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார்.
தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார்.
பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழித்தொழிக்க முடியாது.
வேலுப்பிள்ளை பிரபாகரன், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரழிவிலேயே மரணித்து விட்டதாகவும் அவர், எழுதி வைத்துள்ள சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு தெரிந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை பெற்றுகொடுக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.