மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமானது.
சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 85ஆவது வயதில் அவர் காலமானார்.
அவரது இறுதி கிரிகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று
12-04-2015
காலம் சென்ற சியம் மகா நிகாயவின் பீடாதிபதி சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (12) இடம்பெறவுள்ளன.
கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை அண்ணாரின் பூதவுடலுக்கு பொது மக்களால் அஞ்சலி செலுத்த முடியும்.
பின்னர் பிற்பகல் அனைத்து அரச மரியாதைகளுடனும் அவரது இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடும் சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த எட்டாம் திகதி அதிகாலை காலமானார்.
இதேவேளை, அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள இன்றையதினம் (12) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கு முன்பாகவும் மஞ்சள் கொடியோற்றி வைக்குமாறும் அனைத்து தனியார் – அரசாங்க நிறுவனங்களில் தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.