சுனாமியால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு உலைகளுக்குள் ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ததில் வியக்க வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் இறந்ததுடன், புகுஷிமாவில்(Fukushima) இருந்த 3 அணு மின் நிலையங்கள் வெடித்து சிதறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

அணு மின் நிலையங்கள் பாதிப்பாவதற்கு முன் 3 லட்சம் மக்களை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தியதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பாதிப்புக்குள்ளான அணு மின் நிலையங்களுக்குள் உள்ள வெப்ப நிலை மற்றும் கதிர்வீச்சு அளவுகளை மதிப்பீடு செய்ய TEPCO(Tokyo Electric Power Company) நிறுவனம் ரோபோ(Robot) ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று அனுப்பியது.

pukushima_robo_004விபத்துக்குள்ளான அணு உலையின் முதல் தளத்தில் உள்ள ஆறு பகுதிகளுக்கு அந்த ரோபா அனுப்பப்பட்டது. அங்கு, உருக்குலைந்த அணு உலையின் கீழ்தள பகுதியில் குறைவான 17.8 முதல் 20.2 டிகிரி செல்சியஸ் வெப்பமே பதிவாகியிருந்தது.

இதை தவிர, உருக்குலைந்துள்ள அணு உலையின் அமைப்பை பல்வேறு வடிவங்களில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 60 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோவை சுமார் 10 மணி நேர ஆய்வுக்கு உட்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், 3 மணி நேரத்திலேயே ரோபோ பாதிப்படைந்ததால், ஆய்வு பணிகள் தடைப்பட்டன.

pukushima_robo_003இந்த ஆய்வு குறித்து பேசிய TEPCO நிறுவன செய்தி தொடர்பாளரான Teruaki Kobayashi, அணு உலைக்குள் கதிர்வீச்சு தாக்குதல் அதிகமாக இருப்பதால், பாதுகாப்பான உடையுடன் மனிதர்கள் செல்வது ஆபத்தானது என்பதால் ரோபோவை அனுப்பியதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்பாராத விதமாக ரோபோ பாதிப்புக்குள்ளாகியதால், தற்போது உபயோகமான தகவல் எதையும் பெற முடியவில்லை என்றார்.

இருப்பினும், தற்போது கிடைத்துள்ள தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்வதுடன், எதிர்காலத்தில் ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிப்புக்குள்ளான அணு உலைகளை மனிதர்களால் மட்டும் சீர்படுத்த முடியாது, மேலும் பல நவீன ரோபோக்களை கொண்டு சீர்படுத்த இன்னும் 40 வருடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply