முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கும், இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் எல்லாம் பயத்திலும் ஆச்சர்யத்திலும் வியக்கின்றனர்.

சாகசங்கள் செய்வதற்காகவே பலர் உயிரை பணயம் வைக்கும் நிலையில் ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே பணயம் வைத்திருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அதீப் சையதை (38) அனைவரும் கொண்டாடுகின்றனர்.

புகைப்படக் கலைஞரும், இயற்கை விரும்பியுமான அதீப் அடிக்கடி காடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள், காட்டுக்குள் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆண் சிங்கம் கம்பீரமாக நடந்து வருவதைப் பார்த்தார்.

நீண்ட நாளாக ஒரு சிங்கத்தின் அசலான கம்பீரத்தை அருகிலிருந்து புகைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அதீப், படக்கென்று வண்டியிலிருந்து இறங்கி கேமராவுடன் ஊர்ந்து சென்று சிங்கத்திற்கு மிக அருகில் சென்றார்.

அவரது இந்த செய்கையை அசாத்திய துணிச்சல் என்றும் அடி முட்டாள்தனம் என்றும் பலர் விமர்சிக்கின்றனர்.

276083AA00000578-0-image-a-2_1428539490124காரணம் அதீப் தன்னை நெருங்கி வருவதை பார்த்து விட்ட சிங்கம் கர்ஜித்து, அதீபின் மீது சீறிப் பாய்ந்தது, அப்படி பாயும் நொடியில் எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம்.

அந்த திகில் நொடியில், மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அதீப் எப்படியோ உயிர்தப்பி காருக்குள் வந்து விழுந்தார்.

275DA2F100000578-0-image-a-1_1428539136554இந்த திகில் சம்பவம் குறித்து அதீப் கூறுகையில் “அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் தோன்றிய உணர்வுகளை புகைப்படம் வீடியோ என்று எந்த ஊடகத்தினாலும் வெளிப்படுத்த முடியாது” என்றார்.

2012-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகி தீயாகப் பரவி வருகிறது.

Share.
Leave A Reply