மஹிந்தவுடன் இணையப்போகும் மேலும் 40 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
16-04-2015
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த மேலும் 40 உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நீக்கப்பட்டதை அடுத்து கட்சிக்குள் பூசல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனையடுத்தே மேற்படி 40 உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன்படி எதிர்வரும் மே முதலாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் மே தின கூட்டத்திற்கு சுதந்திர கட்சி அதிருப்தியாளர்கள் 40 பேர் மேடை ஏறவுள்ளதாக கூறப்படுகிறது.
இரத்தினபுரியில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் சுதந்திர கட்சியினர் 28 பேர் மேடையேறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ களமிறங்கினார்.
இதன்போது அதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கினார்.
குறித்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டார்.
இந்நிலையிலேயே தேர்தல் முடிந்த பின்பான கடந்த மூன்று மாதக்காலப்பகுதியில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்கையில் கடந்த வாரத்தில் சுதந்திர கட்சியின் மத்திய குழுவிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஏற்கனவே பலர் களமிறங்கியுள்ள நிலையில் இதற்கு வலு சேர்க்கும் வகையில் சர்வதேச தொழிலாளர்களின் தினமான மே தினத்தில் விசேட பேரணியொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்யவுள்ளனர்.
இந்த பேரணியினூடாக மஹிந்த ராஜபக் ஷ தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை ஆரம் பிக்கவுள்ளார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் பய ணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சுதந்திரக் கட்சியைச் சார்ந்த 40 பேர் மஹிந்த கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.