இலங்கை அர­சி­யலில் அடுத்த வாரம் தீர்க்­க­மான சில தீர்­மா­னங்­களை எடுக்கும் வார­மாக அமையப் போகின்­றது. 19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டுமா?

அல்­லது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டுமா ? என்ற கேள்­விகள் இலங்கை அர­சி­யலை ஆக்­கி­ர­மித்­துள்ள நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் வேட்­பா­ள­ராகி பொதுஜன ஐக்­கிய முன்ன­ணியின் கதிரை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வா­ரென்றும் அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்­றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

ஜனா­தி­பதி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வேட்­பா­ள­ராக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கலாம்.

ஆனால் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ள நிலையில், பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் மஹிந்­தவின் விருப்பமும் அவரை ஆத­ரிக்கும் வாசு, தினேஸ், விமல், கம்­மன்­பில அணி­யி­னரும் சற்று தளர்ந்­துள்ள நிலையில் …..

சித்­திரை புத்­தாண்டு தினத்தை முன்­னிட்டு தங்­கா­லையில் மஹிந்­தவின் வீட்­டுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்  எம்.பி. க்கள் 37 பேர் உட்­பட மாகாண சபை உறுப்­பி­னர்கள் என 57 பேர் சென்று விருந்­து­ப­சா­ரத்தில் கலந்து கொண்­டுள்­ள­தோடு இதன்­போது மஹிந்­தவின் எதிர்­கால அர­சியல் வியூகங்கள் தொடர்­பாக பல தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

பிர­த­ம­ரா­கவும், இரண்டு தட­வைகள் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும் பதவி வகித்த மஹிந்த பொதுத்தேர்தலில் சாதா­ரண வேட்­பா­ள­ராக  கள­மி­றங்­கு­வதை விரும்­ப­வில்­லை­யென்றும்

அதேவேளை சுதந்­திர கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் கிடைக்­காமல் போனால் தினேஸ் குண­வர்த்­த­னவின் தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியில் போட்­டி­யி­டலாம் என்றும் யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­தோடு, அத்­தோடு ஏ.எஸ்.பி. லிய­ன­கேவின் இலங்கை தொழி­லாளர் கட்­சியை மஹிந்­த­வுக்கு வழங்க தயா­ராக லிய­னகே இருப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஆனால் இக்­கட்­சியில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யாது.

அத்­தோடு மஹிந்­தவை ஆத­ரிக்கும் எம்.பி. க்களுக்கும் பொது தேர்­தலில் வேட்பு மனு சுதந்­திர கட்­சியில் நிரா­க­ரிக்­கப்­பட்டால் அவர்­க­ளாலும் மேற்­கண்ட கட்­சி­களில் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யாது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே மக்­க­ளுக்கு நன்கு பரிச்­ச­ய­மான பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் கதிரை சின்­னத்தில் போட்­டி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

இம் முன்­ன­ணியின் பொது செய­லா­ள­ரான முன்னாள் பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன பதவி வகிக்­கின்ற நிலையில் அதற்­கான ஒப்­பு­தலை வழங்க அவர் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் சூழ்­நிலை உரு­வா­கு­மானால் மஹிந்த பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் அவரை ஆத­ரிப்­ப­வர்­களும் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தீர்மானிக்கப்பட்­ட­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

இவ்­வாறு பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் போட்­டி­யிட்டால் 113 இடங்­களை பெற்­றுக்­கொண்டு மஹிந்த பிர­த­ம­ராக வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் நம்­பப்­ப­டு­கி­றது.

இலங்கை அர­சி­யலில் இன்று கடும் சூறா­வளி ஏற்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 20 ஆம் திகதி 19 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­று­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளது.

எதிர்க்­கட்சி தேர்தல் முறை மாற்­றத்­திற்­கான 20 ஆவது திருத்­தத்­தையும் இணைத்து விவாதம் நடத்­தப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?இல்லையா என்பதும் அரசியலில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பிரச்சினையாக தலையெடுத்துள்ளது.

எனவே அடுத்த வாரம் இலங்கை அரசியலில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையலாம். 19 நிறைவேற்றப்படுமா ? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா?பொதுத்தேர்தலில் மஹிந்தவின் வகிபாகம் என்னவென்பது வெளிவரலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

Share.
Leave A Reply