தயா­நிதி மாறன் மத்­திய அமைச்­ச­ராக இருந்­த­போது சென்­னையில் உள்ள தனது வீட்டில் ரக­சி­ய­மாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்து சன் டி.வி. யின் ஒளி­ப­ரப்­புக்கு உத­வி­ய­தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் 300 கோடி ரூபா அள­வி­லான இந்த ஊழல் புகாரில் தயா­நி­தியை எந்த நேரமும் சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்­பி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஜாமீன் வழங்­கப்­பட்டால் இவர் வெளி­நாட்­டுக்குத் தப்பி ஓடக்­கூடும் என்ற சந்­தே­கமும் சி.பி.ஐ.க்கு இருக்­கி­றதாம்!

சுமார் ஆயிரம் கோடி ரூபா ஊழல் வழக்­கு­களில் சிக்­கி­யி­ருக்கும் தயா­நிதி மாறன் வெளி­நாட்­டுக்குத் தப்பி ஓட திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக வரும் தக­வல்­கள்தான் லேட்டஸ்ட் பர­ப­ரப்பு.

இது தொடர்­பாக டெல்லி தனி நீதி­மன்­றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்­தி­ருக்கும் மனுவில் பகீர் புகார்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன!

சமீப நாட்­க­ளாக வாட்ஸ் அப்­களில் அதிகம் அடி­படும் விவ­காரம் மாறன் சகோ­த­ரர்கள் சம்பந்தப்பட்டதுதான்!

தங்­க­ளது மீடியா நிறு­வ­னங்­களை கைமாற்றி விட்டு இவர்கள் எஸ்கேப் ஆக இருப்­ப­தாகத் தொடர்ந்தும் தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றன.

இவர்­களில் கலா­நிதி மாறன் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு உள்­ளது. தயா­நிதி மீது ஏர்செல் மேக்சிஸ் மட்­டு­மல்­லாமல் சென்­னையில் முறை­கே­டாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்த வழக்கும் பாய்ந்திருக்கி­றது.

தயா­நிதி மத்­திய அமைச்­ச­ராக இருந்த போது சென்­னையில் உள்ள தனது வீட்டில் ரக­சி­ய­மாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்து சன் டிவியின் ஒளி­ப­ரப்­புக்கு உத­வி­ய­தாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்­ளது.

சுமார் 300 கோடி ரூபா அள­வி­லான இந்த ஊழல் புகாரில் தயா­நி­தியை எந்த நேரமும் சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்­பி­ருப்­ப­தாக தக­வல்கள் வரு­கின்­றன.

இதற்­கி­டையே 700 கோடி ரூபா அள­வி­லான ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்­கிலும் தயா­நி­திக்கு நெருக்கடி அதி­க­ரித்து வரு­கி­றது.

இந்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டில் டெல்லி தனி நீதி­மன்ற நீதி­பதி ஓ.பி­.சைனி முன்னிலையில் சி.பி.ஐ. அதி­கா­ரிகள் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­தனர்.

அதை தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்ட தயா­நிதி மாறன், கலா­நிதி மாறன், மலே­சிய மேக்சிஸ் நிறு­வன அதிபர் அனந்­த­கி­ருஷ்ணன், அந்த நிறு­வ­னத்தின் தலைமை அதி­காரி ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் உட்­பட சம்­பந்­தப்­பட்ட நான்கு நிறு­வ­னங்­க­ளுக்கு நீதி­மன்றம் நோட்டீஸ் அனுப்­பி­யது.

இந்தச் சூழலில் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசா­ரிக்கும் தனி நீதி­மன்றம் ஏர்செல் –மேக்சிஸ் வழக்கை விசா­ரிக்­கக்­கூ­டாது என உச்ச நீதி­மன்­றத்தில் மாறன்கள் மனு போட்­டனர்.

ஆனால் இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட தனி நீதி­மன்­றத்­தி­லேயே விண்­ணப்­பிக்­கும்­படி கடந்த பெப்­ர­வரி 9 ஆம் திகதி உச்ச நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

பின்னர் மார்ச் 2 ஆம் திகதி தனி நீதி­பதி ஓ.பி.சைனி முன்பு ஆஜ­ரான மாறன் சகோ­த­ரர்கள் தனித்தனியாக ஜாமீன் மனு தாக்கல் செய்­தனர்.

கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­த­போது மாறன்­களின் ஜாமீன் மனு மீதான விசா­ரணை நடக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அன்று இந்த வழக்கு டூ ஜி வழக்கில் இருந்து வேறு­பட்­டது. எனவே இந்த தனி நீதி­மன்றம் இதனை விசா­ரிக்­கக்கூடாது என மாறன் சகோ­த­ரர்கள் இரு­வரும் தனித்­த­னி­யாக மனு போட்­டனர்.

இது ஒரு புற­மி­ருக்க இந்த வழக்கில் சம்­பந்­தப்­பட்ட வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு சம்மன் அனுப்ப குறைந்த பட்சம் மூன்று மாத கால அவ­காசம் தேவை என சி.பி.ஐ. வழக்­க­றிஞர் கே.கே. கோயல் கோரிக்கை வைத்தார்.

அதன்­படி வழக்கு விசா­ரணை ஆகஸ்ட் 3 ஆம் திக­திக்கு தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஏர்செல் –மேக்சிஸ் வழக்கில் மாறன்­களின் ஜாமீன் மனு மீதான விசா­ர­ணையும் அன்று நடை­பெற இருக்­கி­றது.

இதில் ஹாட், தயா­நி­திக்கு ஜாமீன் வழங்­கக்­கூ­டாது எனக் குறிப்­பிட்டு மார்ச் 16 ஆம் திகதி தனி நீதி­மன்­றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்­தி­ருக்கும் ஒரு மனுதான்.

அதன் நகல் நமக்கு கிடைத்­தது. அதில் இந்த வழக்கின் விசா­ரணை அதி­கா­ரி­யான டெல்லி சி.பி.ஐ. துணை பொலிஸ் சூப்­பி­ரெண்டு எஸ்.கே.சின்ஹா விரி­வா­கவே பல தக­வல்­களைக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

தயா­நிதி உள்­ளிட்­ட­வர்கள் மீது இந்­திய தண்­டனைச் சட்டம் 120 ஆவது பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரி­வுகள் 7, 12, 13 (2), 13 (1) (டி) ஆகி­ய­வற்றின் கீழ் இந்த நீதி­மன்­றத்தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்கும் தயா­நிதி 2004 மே முதல் 2007 மே வரை மத்­திய தொலைத் தொடர்பு அமைச்­ச­ராக பதவி வகித்­தவர். அப்­போது தனது சகோ­தரர் கலா­நிதி மற்றும் இதர குற்­ற­வா­ளி­க­ளுடன் இணைந்து குற்­றச்­ச­தியில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.

தனது அமைச்சர் பத­வியை முறை­கே­டாக பயன்­ப­டுத்தி சிவ­சங்­க­ரனின் ஏர்செல் நிறு­வ­னத்­திற்கு ஏழு தொலைத்­தொ­டர்பு வட்­டங்­க­ளுக்­கான உரிமம் வழங்­கு­வதை திட்­ட­மிட்டு கால­தா­மதம் செய்திருக்கிறார்.

ஏர்செல் நிறு­வ­னத்தை தொலைத்­தொ­டர்பு வணி­கத்தில் இருந்து வெளி­யேற்றும் அள­வுக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பின்னர் சிவ­சங்­க­ரனின் ஏர்செல் நிறு­வன பங்­கு­களை மலே­சி­யாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறு­வ­னத்­திற்கு பரி­மாற்றம் செய்த பிறகு நீண்ட கால­மாக வழங்­கப்­ப­டாமல் இருந்த உரி­மங்கள் வழங்கப்பட்டிருக்­கின்­றன.

இதன் பிறகு மேக்சிஸ் தன்னைச் சார்ந்த நிறு­வ­னங்கள் மூல­மாக சன் டைரக்ட் நிறு­வ­னத்தில் முத­லீடு செய்­தி­ருக்­கி­றது.

அதா­வது மொரி­ஷி­யஸைச் சேர்ந்த சவுத் ஆசியா என்­டர்­டெய்ன்மென்ட் நிறு­வனம் மூல­மாக 549 கோடி ரூபாயும் இங்­கி­லாந்தின் அஸ்ட்ரோ அல் அசி­யாவின் துணை நிறு­வ­னங்கள் மூல­மாக 193 கோடி ரூபாவும் சன்­டைரக்ட் முத­லீ­டாகப் பெற்­றி­ருக்­கி­றது.

இந்தத் தொகை­களை சன் டைரக்டின் இயல்­பான பங்கு மதிப்பைத் தாண்டி தயா­நிதி சட்­ட­வி­ரோ­த­மாக தனது சகோ­தரர் கலா­நிதி மூல­மாக பெற்­றி­ருக்­கிறார்.

குற்றம் சாட்­டப்­பட்ட தயா­நிதி அதி­க­மான பின்­பு­லங்கள் உடை­யவர். குறிப்­பாக சென்­னையில் இவ­ரது செல்­வாக்கு அதிகம்.

எனவே இந்த வழக்கின் சாட்­சி­களை இவர் தனக்கு சாத­க­மாக திருப்ப வாய்ப்­புகள் அதிகம் இருக்­கி­றது. இந்த வழக்கில் குறிப்­பிட்ட சில கோணங்­களில் இன்னும் விசா­ரணை நடந்து கொண்­டி­ருக்­கி­றது. அந்த விசா­ரணை நடை­மு­றையை இவர் கெடுக்­கக்­கூடும்.

கடந்த காலத்தில் உயர் பத­வியை தவ­றாகப் பயன்­ப­டுத்­திய இவர் இப்­போதும் விசா­ரணை நடை­மு­றை­களில் தலை­யிடும் வாய்ப்பு இருக்­கி­றது. இவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தீவி­ர­மா­னவை.

நாட்டை விட்டு இவர் வெளி­யேறி வழக்கு விசா­ர­ணையில் பங்கு பெறாமல் இருக்­கவும் அதிக வாய்ப்பு இருக்­கி­றது.

எனவே இந்த வழக்கின் நலன் கருதி இவ­ரது ஜாமீன் மனுவை நிரா­க­ரிக்க வேண்டும் என கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார் சி.பி.ஐ. அதி­காரி எஸ்.கே. சின்ஹா.

இந்த வழக்கில் வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதால் வழக்கு தாம­த­மா­வதை சி.பி.ஐ. யால் தவிர்க்க முடி­ய­வில்லை.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி மீண்டும் விசா­ர­ணைக்கு வரும்­போது மாறன் சகோ­த­ரர்­களின் ஜாமீன் மனுக்­களை நிரா­க­ரிக்க வலி­யு­றுத்தி சி.பி.ஐ. தரப்பு வழக்­க­றிஞர் வாதங்­களை வைப்பார் எனத் தெரி­கி­றது.

இந்த வழக்கில் ஆவ­ணங்­களை மறைத்து வைக்­கவும் சாட்­சி­களைக் கலைக்­கவும் தயா­நிதி மாறன் தயங்க மாட்டார். மேலும் ஜாமீன் வழங் கப்பட்டால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக்கூடும் என்கிற சந்தேகமும் சி.பி. ஐ.க்கு இருக்கிறது.

தவிர இதே வழக்கு தொடர் பாக மத்திய அமுலாக்கப் பிரிவும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக் கிறது.

அவர்கள் சம்பந்தப்பட்ட நிறு வனங்களின் சொத்துக்களை முடக்கி வைக்க வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து தப்பும் விதமாக மாறன்கள் தங்களின் சொத்துக்களை விற்கும் முயற்சியில் இருக்கிறார்களா? என்பதையும் விசா ரணை ஏஜென்ஸிகள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இவர்க ளின் ஆடு புலி ஆட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்கள்!

Share.
Leave A Reply