விழுப்புரம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த பத்தர் செல்வம் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வருகிறது.இதனால் அடிக்கடி இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் நகராட்சி பூங்கா செட்டில் கார்க் விளையாடிவிட்டு வீடு திரும்பிய பத்தர் செல்வத்தை மர்மக் கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்துள்ளது.
மேலும் கொலையில் ஈடுபட்ட மர்மக் கும்பல், படுகொலை செய்யப்பட்ட பத்தர் செல்வத்தின் தலையை புதுவை நெடுஞ்சாலை காந்தி சிலை அருகே வீசிவிட்டு சென்றுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
நாய்க்காக நடந்த கொலைகள்: இளைஞர்கள் வெறிச் செயல்!
21-04-2015
விருதுநகர்: நாய்க்காக கணவன், மனைவியை நான்கு வாலிபர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி சினிமாவில் நடிகர் வடிவேல் ஒரு வசனம் பேசுவார். ‘ ஒரு புறாவுக்காக போரா? பெரும் அக்கப்போறாக இருக்கிறதே’ன்னு இந்த ரீதியில் சில வேடிக்கையான சம்பவங்களும் நடப்பதுண்டு, அதே நேரம் விபரீதமான சம்பவங்களும் அரங்கேறுவதுண்டு. அப்படிவகையான செய்திதான் இது.
ஒரு ஒன்றரை வயது நாய்க்குட்டிக்காக கணவன், மனைவி இருவரையும் கொலை செய்துள்ளனர் 4 இளைஞர்கள்.
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் முத்துராஜ் (43). இவர் ஏழாயிரம் பண்ணையில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (37). பூ வியாபாரி முத்துராஜிக்கு நாய்கள் வளர்ப்பதில் ரொம்பவும் ஆர்வம்.
சில மாதம் முன்பு இவரது பெண் நாய்க்குட்டிக்கு ஆண் நாய்க்குட்டி பிறந்தது. ஒன்றரை வயதான அந்த நாய்க்குட்டிக்கு ‘ராக்கி ’ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார் முத்துராஜ்.
ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள முத்தாண்டிபுரத்தை சேர்ந்தவர் பொன் வசந்த் (18). இவர் அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் வேலை செய்து வருகிறார்.
சமீபத்தில் முத்துராஜ் வளர்த்து வந்த ஒன்றரை வயது ஆண் நாய்க்குட்டி பொன் வசந்த்தின் கண்ணில் பட்டது. நாய் மீது ஆசை கொண்ட பொன் வசந்த் அந்த நாய்க்குட்டியை திருடி சென்று விட்டார்.
இதை அறிந்த பூ வியாபாரி முத்துராஜ் முத்தாண்டிபுரம் பஞ்சாயத்து தலைவர் திருக்குமரனிடம் பொன் வசந்த் நாயை திருடிக்கொண்டு வந்தது தொடர்பாக புகார் செய்தார்.
உடனே பஞ்சாயத்து தலைவர் திருக்குமரன் அதே ஊரை சேர்ந்த பொன் வசந்த்தை அழைத்து கண்டித்ததோடு நாய்க்குட்டியை மீட்டு மீண்டும் முத்துராஜிடம் ஒப்படைக்க செய்தார்.
அதோடு முத்துராஜிடம் பொன் வசந்த்தை மன்னிப்பு கேட்க செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பொன் வசந்த், தனது ஆடு மேய்க்கும் கூட்டாளிகளான அருண்குமார் (16), வினோத்குமார் (18), முத்துமணி (18) ஆகியோரிடம் சொல்லி முத்துராஜை கொலை செய்ய முடிவு செய்தனர்.
ஏழாயிரம் பண்ணையில் நேற்றிரவு 10 மணிக்கு பூக்கடையை பூட்டி விட்டு சைக்கிளில் முத்துராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏழாயிரம் பண்ணை முக்குரோட்டில் அவர்களை வழி மறித்த பொன் வசந்த் உள்ளிட்ட 4 பேரும் அரிவாளால் கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்தில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர். இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து பொன் வசந்த், அருண்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வினோத்குமார், முத்துமணியை தேடி வருகின்றனர்.
நாய்க்குட்டிக்காக கணவன் ,மனைவியை 4 இளைஞர்கள் கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-எம்.கார்த்தி