முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்.
“சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன்” என்று முன்னாள் அமைச்சரும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார்.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது.
விமான நிலைய வளாகத்தில் இருந்த மஞ்சள் பூக்கள் பூக்கும் மரத்தின் கிளையில் ஏறியிருந்த போது அவருக்கு பிரித் நூல் கட்டப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச்சேர்ந்த பிரபல்யமானவர் என்றபோதிலும் அவரை வரவேற்பதற்கு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்