மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த் தமிழர்களையும் முன்வருமாறு வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற பத்திரிகையாளர்  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி 6 வது வருடம் நிறைவுபெற இருக்கின்றது. இதையொட்டி புலம்பெயர் தமிழர்களுக்கும்.

தாய்த் தமிழர்களுக்கும். மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தினை பெரிய அளவில் அனுஷ்டிக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு.

எனவே இந்த தவறினை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலிகளை செலுத்த முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு மிகப்பெரிய அளவில் முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை அனுஷ்டிப்பதன் ஊடாக தான் சர்வதேச சமூகத்திற்கு எமது அழிவிற்கு நீதி தேவை என்பதனை உணர்த்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நமது கேள்வி..
முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில்  இறந்த  மக்களை  நினைவு கூருவதற்காக ஒரு நினைவு தூபி  அமைப்பதற்கு  இப்பொழுது   எந்தத்   தடையுமில்லையே?

அதற்கான  பிரேரணையை   ஒன்றை   வடமாகாண சபையில் கொண்டுவந்து  நிறைவேற்றி நடைமுறைப்படுத்த  ஏன் முயற்சிக்கவில்லை?

மகிந்த ஆட்சியில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை  நடைமுறைப்படுத்துவதற்கு   இ்ன்றைய  நிலையில்  ஏதேனும்  தடையுண்டோ?

அவற்றை  நடைமுறைப்படுத்துவதற்கு  வடமாகாணசபை   ஏதாவது    நடவடிக்கை   எடுக்கின்றதா?

Share.
Leave A Reply