இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள ஹாட்டன் கார்டன் பகுதியில் தங்க, வைர நகைகளை பாதுகாத்து வைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டக அலுவலகம் ஒன்றுள்ளது.
கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இந்த அலுவலகத்துக்குள் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் உள்ளே இருந்து சுமார் 200 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 1900 கோடி ரூபாய்) மதிப்பிலான தங்க, வைர நகைகளை அள்ளிச் சென்றது.
<<<<<<<
இதுவரையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக யாரும் பிடிபடாத நிலையில், இந்த துணிகர கொள்ளை தொடர்பாக துப்பு துலக்கிவரும் லண்டன் நகர போலீசார் தற்போது சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பெட்டக அலுவலகம் இயங்கிவந்த அதே கட்டிடத்தில் வேறு சில வணிக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
Bars were ripped from the vault door, too:
அதில் ஒரு அலுவலகத்தின் பக்கவாட்டு சுவரில் ராட்சத டிரில்லிங் இயந்திரங்களின் மூலம் சுமார் ஒன்றரை அடி அகலத்துக்கு துளையிட்டு அந்த கொள்ளை கும்பல் உள்ளே புகுந்துள்ளது.
உள்ளே நகைகளை பாதுகாத்து வைத்திருந்த பெட்டங்களை கடப்பாறையால் (குரோபார்) அடித்து, உடைத்து, நகைகளை எல்லாம் மூட்டையாக கட்டிக் கொண்டு அதே துளையின் வழியாக அவர்கள் தப்பிச் சென்றனர் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து சேகரித்த சில தடயங்களின் அடிப்படையில் அந்த கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் லண்டன் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.