அச்சு அசலாக ஒரு வித்தியாசம் கூட காண முடியாத அளவிலான இரட்டையர்களைக் காண்பது வெகு அரிது. எப்படிப்பட்ட இரட்டையர்களாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த இரட்டை சகோதரிகளிடம் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. அந்த அளவுக்கு இருவரும் ஜெராக்ஸ் காப்பி போல ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்படி ஒரே மாதிரியாக இருப்பதற்காக இவர்கள் செய்த செலவு எக்கச்சக்கம். அதாவது உடல் முழுவதும் பல இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருவரது உருவத்தையும் ஒரே மாதிரியாக மாற்றிய பெருமைக்குரியவர்கள் இந்த ஆஸ்திரேலியச் சகோதரிகள்.
பெர்த் நகரைச் சேர்ந்த லூசி மற்றும் அன்னா டெசினிக் ஆகியோர்தான் இந்த அபூர்வ சகோதரிகள். இருவருக்கும் வயது 28 ஆகிறது. இருவரும் இணைந்தே வாழ்கின்றனர்.
இப்போது இருவரும் ஒரே நபரையும் காதலிக்கின்றனர். அவருடனேயே படுக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரே மாதிரி சாப்பிடுகின்றனர்.
22-1429687863-twins34345

அதிசயப் பிறவிகள்…
இருவரையும் எங்குமே பிரித்துப் பார்க்க முடியாது. எங்கு போனாலும் சேர்ந்தே போகின்றனர் வருகின்றனர். இருவரையும் ஆஸ்திரேலியாவில் ஆச்சரியமான பிறவிகளாக மக்கள் பார்க்கின்றனர்.
22-1429687883-twin-sisters667

அச்சு அசலா…
ஒரே மாதிரி உருவத்தைப் பெற இவர்கள் செய்யாத செலவில்லை. தங்களது மார்பகங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இரண்டரை லட்சம் டாலர் பணத்தைக் கொட்டி அறுவைச் சிகிச்சை செய்து பெரிதாக்கியுள்ளனர் என்றால் பாருங்கள்.
22-1429687874-twin-sisters677

ஒரே மாதிரி உருவம்… உலகிலேயே ஒரே மாதிரி உருவம் படைத்த இரட்டையர்கள் என்ற பெயர் இவர்களுக்கு உள்ளது. ஜப்பான் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியிலும் இவர்கள் இணைந்து கலந்து கொண்டனர்.22-1429687892-twin-sisters

ஒரே காதல்…
இந்த அபூர்வ சகோதரிகள் தற்போது 31 வயதான பென் பைர்ன் என்பவரைக் காதலித்து வருகின்றனர். இருவரும் அவருடன் இணைந்தே இருக்கின்றனர். வெளியில் போனாலும், உறவில் ஈடுபட்டாலும் சேர்ந்தே செயல்படுகின்றனராம்.22-1429687863-twins34345

டபுள் சந்தோஷம்…
பென்னும் பெர்த் நகரைச் சேர்ந்தவர்தான். இந்த சகோதரிகளுடன் டேட்டிங் போவதை தான் விரும்புவதாகவும், இருவரையும் மதிப்பதாகவும் அவர் கூறுகிறார். இருவருடனும் இணைந்து இருப்பது தனக்கு சந்தோஷம் தருவதாகவும் அவர் கூறுகிறார்.22-1429688017-twins35

இனிமையானது…
இதுகுறித்து லூசி கூறுகையி், நாங்கள் 24 மணி நேரமும் இணைந்தே இருக்கிறோம். எனவே காதலருடன் மட்டும் தனித் தனியாக இருக்க முடியாது. அவருடனும் சேர்ந்தே இருக்கிறோம். சேர்ந்தே சந்தோஷிக்கிறோம். இது இனிமையானது என்கிறார்.22-1429687892-twin-sisters

தனித்தனி டேட்டிங்…
ஆனால் பென் இவர்களுக்கு முதல் பாய் பிரண்ட் இல்லையாம். கடந்த காலத்தில் தனித் தனியாக பாய் பிரண்ட வைத்திருந்தனராம் ஆனால் தனித் தனியாக பிரிந்து டேட்டிங் போவது சரிப்பட்டு வரவில்லை என்பதால் பென்னை இருவரும் ஷேர் செய்து கொள்ள முடிவெடுத்தனராம்.22-1429687874-twin-sisters677

அம்மாவுக்கு மட்டும் தெரியும்…
சரி உங்களை யாருமே சரியாக அடையாளம் காண முடியாதா என்று கேட்டால் எங்களது தாயார் சரியாக கண்டுபிடித்து விடுவார். ஆனால் எங்களது தந்தை உள்பட மற்றவர்கள் சற்று குழம்பிப் போய் விடுவார்கள் என்கிறார்கள் இந்த சகோதரிகள்.

Share.
Leave A Reply