யாழ்.நாவாற்குழி சந்தியில் வியாழக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக காத்திருந்த பஸ் மீது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் பின்பக்கமாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 பேரில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதுடன், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவர் ஆவார்.
விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.