ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து சில நாட்களே ஆன நிலையில், பெயர் வைக்கப்பட்டாத இக்குழந்தை விநாயகரின் அவதாரம் என்று கருதும் அம்மாநில மக்கள் பல பகுதிகளில் இருந்தும் குழந்தையை பார்க்க குவிந்து வருகின்றனர். விநாயகரும் நான்கு கைகளுடன் பிறந்தவர் என்பதால் இக்குழந்தையும் விநாயகரின் அவதாரம் என்றே கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக உள்ளவர்கள் கருதுகின்றனர்.

இந்த அதிசய குழந்தையை பார்க்க வந்த குந்தலேஷ் பாண்டே கூறுகையில், 72 மைல் தொலைவிலிருந்து இந்த அவதார குழந்தையை பார்க்க வந்தேன் என்றார்.

எனது நண்பர் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பியபோது, போட்டோஷாப்பில் வேலை செய்து குழந்தையின் கை, கால்களை அதிகமாக காண்பித்திருப்பார் என கருதினேன். ஆனால் அது உண்மை என்று நண்பர் கூறியதால், அதிசய குழந்தையை பார்க்க நேரில் வந்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

நாளுக்கு நாள் குழந்தையை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை சமாளிக்க பெற்றோர்கள் கஷ்டப்படுகின்றனர்.

எனினும் கருவில் இருந்த இரட்டை குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடால் தான் குழந்தை இவ்வாறு பிறந்துள்ளதாக மருத்துவ உலகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாண் துண்டுகள் மூலம் தாஜ்மஹால் சிற்பம்
23-04-2015
976712
இந்­தி­யா­வி­லுள்ள உலகப் புகழ்­பெற்ற தாஜ்­ம­ஹாலின் கட்­ட­டத்தின் சாயலில் பாண் துண்­டுகள் மூலம் சிற்­ப­மொன்று செய்­யப்­பட்டு லண்டன் வீதி­யொன்றின் மூலையில் கிடந்­தமை பலரை வியக்­க­வைத்­துள்­ளது.

976712

லண்டன் பெக்ஹாம் பகு­தி­யி­லுள்ள குயின்ஸ் ரோட் எனும் வீதியில் இந்த பாண் சிற்பம் காணப்­பட்­டது.

அப்­ப­கு­தியில் அடிக்­கடி பய­ணிக்கும் டொம் மெக்­கன்ஸி என்­பவர், காலை­வே­ளையில் இந்த சிற்­பத்தைக் கண்டு வியப்­புற்றார்.

இது தொடர்­பாக அவர் கருத்துத் தெரி­விக்­கையில், “நான் அடிக்­கடி இவ்­வீ­தியால் செல்­வது வழக்கம்.

கடந்த சனிக்­கி­ழமை காலை அவ்­வ­ழியே சென்­ற­போது, அசா­தா­ர­ண­மான ஒரு பொருள் தென்­பட்­டது.

அருகில் சென்று பார்த்­த­போது, பாண் துண்­டுகள் மூலம் தாஜ்­மஹால் சிற்பம் செய்­யப்­பட்­டி­ருப்­பதை கண்டேன்.

இதை யார் செய்­தார்கள் என்­பது மர்­ம­மா­க­வுள்­ளது.  கலை நோக்­குடன் அல்­லாமல், குடும்ப கொண்­டாட்டம் ஒன்­றுக்­காக இந்த சிற்பம் செய்யப்பட்டி ருக்கலாம் எனக் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply