யாழ் நகரில் பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவரது வீட்டில் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு அந்தணர்கள் உட்பட மூவரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விடுதி உரிமையாளரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த நபர்கள் சி.சி.ரி.வி கமராவின் உதவியுடன் இருவரை பொலிசார் கடந்த 19 ஆம் திகதி கைது செய்த நிலையில் மூன்றவது நபர் மறுநாள் பொலிசாரிடம் சரணடைந்ததாகவும் அவர்களை முறையே 19, 20 ஆம் திகதிகளில் நீதவான் முன் ஆயர்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் கொக்குவிலைச் சேர்ந்த லதன் சர்மா, கௌதம் சர்மா, மற்றும் அரியாலையைச் சேர்ந்த ரங்கநாதன் தரன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ் நகரில் சிறு பொருட்கள் விற்பனை செய்துவருபவர்கள் என தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வரம் குறித்த விடுதி ஒன்றின் உரிமையாளர் கொழும்பு சென்றிருந்த சமயம் இரவு வேளை கொக்குவிலில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோஒன்றில் வந்த குறித்த நபர்கள் வீட்டின் முன்னால் இறங்கி வீடு்டினை நோட்டம் விட்டனர்.
பின்னர்.., ஆட்டோவில் சென்று விட்டு மீண்டும் வந்து நோட்டமிடுவதும் வீட்டில் யாரும் நிற்கின்றார்களா என அறிய வீட்டிற்குள் கல் எறிந்து பார்ப்பதும் பின்னர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பின்னர் வீட்டு வளவிலிருந்து மதில்பாய்ந்து வெளியேறும் காட்சிகள் வீட்டு உரிமையாளரின் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த குறித்த வீட்டின் உரிமையாளரான பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர், திருடவந்தவர்கள் தங்கியிருந்த வீடு தனது வீட்டிலிருந்து நூறு மீற்றர் தூரத்திலேயே உள்ளதாகவும் தான் வீட்டில் இல்லாதனை அவர்கள் அறிந்தே வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் வந்த ஆட்டோவினைக் கொண்டே அவர்களை அடையாளம் காண்டுகொண்டாதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.