மாங்குளம், இரணைமடு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள் உட்பட மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 3.45 மணியளவில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு வீதியில் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பரீட்சார்த்த ரயிலில் கார் மோதியுள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர்.

இவர்களில் பெண் ஒருவரும், சிறுமி உட்பட இரண்டு ஆண்களும் அடங்குவர். இதேவேளை மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

00124567811121314 copie

Share.
Leave A Reply