கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது.

திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அரசின் சட்டமன்ற நிகழ்ச்சியில் அழைப்பாளராக வந்திருந்தார் நடிகை ஊர்வசி.

நிகழ்ச்சிக்கு வந்தபோது, அவர் குடிபோதையில் தள்ளாடியபடி காரிலிருந்து இறங்கினார். பின்னர் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் திட்டியபடி காரில் ஏற முயன்றார்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக, வார்த்தைகள் பிறழ பேசியதை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இப்போது பரபரப்பாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏதோ மன அழுத்தத்தில் பேசியதை பெரிது படுத்த வேண்டாம் என மலையாள நடிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

 

நடிகை ஊர்வசி கேரளா அசெம்ப்ளி யில் Full ஜாலி

Share.
Leave A Reply