காதல் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த காதலானது எதனால் வந்தது என்று காரணம் கேட்டால், அதற்கும் பதில் சொல்ல முடியாது.ஏனெனில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வருவது தான் உண்மையான காதல். எதிர்பார்ப்புடன் வரும் காதல் நீண்ட நாட்கள் நிலைத்திருப்பது இல்லை. அந்த மாதிரி இந்த உலகில் நிறைய பேர் காரணமே இல்லாமல், குறுட்டுத்தனமாக காதலித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் காதல் செய்வது மிகவும் ஈஸி. ஆனால் அந்த காதலில் ஜெயித்து காட்டுவது தான், அந்த காதலின் உண்மையான வெற்றி. ஆனால் காதலில் வெற்றிப் பெற்றவர்கள் குறைவாக இருந்தாலும், அவர்களது வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கும்.

பொதுவாக சினிமா என்றாலே பல கிசுகிசுக்கள் வரும். இருப்பினும், அந்த கிசுகிசுக்களையும் மீறி, காதலித்து சந்தோஷமாக வாழும் தமிழ் திரையுலக ஜோடிகள் பலர் உள்ளனர்.இத்தகைய ஜோடிகளைப் பற்றி எத்தனை தவறான கிசுகிசுக்கள் இருந்தாலும், அந்த ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையினால், இன்னும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இவர்களில் விவாகரத்து பெற்று, வேறொருவரை காதலித்து திருமணம் செய்துள்ளோரும் உள்ளனர். இது காதல் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதற்கான ஒரு சான்றாகும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, காதலர் தினத்தன்று தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் சில ஜோடிகளைப் பட்டியலிட்டுள்ளது.14-1392364227-1-rajinikanth-with-latha-600

ரஜினிகாந்த்-லதா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதாவை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். இன்றும் இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

14-1392364232-2-ajith-shali-600

அஜித்-ஷாலினி
காதல் என்றாலே அஜித்-ஷாலினி போன்று தான் இருக்க வேண்டும் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் அந்த அளவில் காதலித்து, திருமணம் செய்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
14-1392364239-3-surya--jyothika--s-600

சூர்யா-ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே மிகவும் தமிழில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
amala

நாகார்ஜூனா-அமலா
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் தான் நாகர்ஜூனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையான அமலாவை காதலித்து திருமணம் செய்து, இன்னும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
14-1392364247-5-prasanna---sneha--600

பிரசன்னா-ஸ்நேகா
பிரசன்னா மற்றும் ஸ்நேகா நண்பர்களாக இருந்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
selvarakavan

செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி
இயக்குநர் செல்வராகவன் முதன் மனைவியை விவாகரத்து செய்து, பின் கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த ஜோடியும் இன்றும் சந்தோஷமாக தான் உள்ளது.
14-1392364257-7-dhanush-aishwarya-2-600

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வருகின்றனர்.

14-1392364261-8-chaya-singh---krishna--600

கிருஷ்ணா மற்றும் சாயாசிங்
நடிகை சாயாசிங், நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
14-1392364266-9-geniliya-with-husband--600

ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ஜெனிலியா, இந்திய நடிகரான ரித்தேஷ் என்பவரை மணந்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

14-1392364270-10gv-prakash-saindhavi--600

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே பாடகர்கள். இவர்கள் இருவருமே பல வருடங்களாக காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.
nasriya

நஸ்ரியா மற்றும் பகத் பாசில்
சமீபத்தில் தான் நடிகை நஸ்ரியா மற்றும் நடிகரான பகத் பாசிலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சற்று சர்ச்சையாகவே உள்ளது. ஏனெனில் இவர்களது திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நஸ்ரியாவின் தந்தை கூறியுள்ளார்.
இது நம்பமுடியாதவாறு தான் உள்ளது. இருப்பினும் இவர்கள் திருமணத்திற்கு பின்னர் சந்தோஷமாக வாழ்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Share.
Leave A Reply