லண்டன்: பிரபல வீடியோ வலைத்தளமான யூடியூப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வேடிக்கை (பிராங்க்) நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் தெருவில் செல்லும் 100 பெண்களை சந்திக்கும் ஒரு வாலிபர் அவர்களிடம் ஜாலியாக இருக்க அனுமதி கேட்கும் காட்சியும், அந்த பெண்களின் ஆமோதிப்பும், ஆட்சேபமும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்ததன் வெற்றியை கண்டு புல்லரித்துப் போன யூடியூப் நிறுவனத்தின் ‘வாட்எவர்’ சேனல், அந்த பழைய பாணியை சற்று மாற்றி யோசித்து, இந்த முறை தெருவில் செல்லும் ஒரு அழகிய இளம்பெண் சுமார் 100 இளைஞர்களை சந்தித்து ‘போகலாமா?’ என்று அழைப்பு விடுக்கும் வேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஆண்ட்ரியா வெண்டெல் என்ற அழகிய இளம்பெண் சமீபத்தில் தெருத்தெருவாக திரிந்து கண்ணில் தென்பட்ட ஆண்களிடம் என்னுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள நீங்கள் தயாரா?
என்று அழைப்பு விடுக்க, சுமார் 30 ‘ஜொள்ளர்கள்’ பூம்பூம் மாடு பாணியில் தலையை அசைத்து குஷியாக சம்மதம் தெரிவித்தனர்.
மீதி 70 பேர் ‘பரவாயில்லைங்க.., நீங்க வேற ஆளைப்பாருங்க’ என்ற பாணியில் மழுப்பலாக பதில் அளித்து நழுவிக் கொண்டனர். அந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு..