இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்படவிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் கடைசி முறையாக அவர்களைப் பார்க்க சிறைக்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
(மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரூ சானைப் பார்க்க அவரது தாயார் ஹெலன், சிறைக்குச் செல்கிறார்.)
மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உறவினர்கள் நுஸகம்பகன் சிறைக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால், காவலர்கள் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச் சென்றனர்.
சுகுமாரனின் சகோதரி மயங்கிவிழுந்ததால், அவர் தூக்கிச் செல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று இரவில் சான், சுகுமாரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது என்ற தகவல், சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேசிய நாட்டுச் சட்டப்படி, கைதிகளுக்கு 72 மணி நேரத்திற்கு தண்டனை நிறைவற்றப்படுவது குறித்து முறையாக அறிவிக்கப்படும்.
(மரண தண்டனையை நிறுத்தக் கோரி இந்தோனேசியாவில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.)
செவ்வாய்க் கிழமையன்று, சிறையிலிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களைச் சந்திக்கவந்த அவர்களது உறவினர்கள், சிலாகேப் துறைமுகத்திலிருந்து சிறைக்கு நடந்துவந்தபோது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ள முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தீவில் வந்து இறங்கியபோது, சானின் தாயார் ஹெலன் அழுதபடி இருந்தார்.
குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், சிறையை நெருங்கும்போது, ‘மெர்சி’ என்று கத்தினர்.
திங்கட்கிழமையன்று, ஆண்ட்ரூ சான் தனது காதலி ஃபெப்யந்தி ஹெரெவிலாவைத் திருமணம் செய்துகொண்டார்.
(மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சான், சுகுமாரன்.)
இந்த வழக்கு தொடர்பாக ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இவர்களது மரண தண்டனையை ஒத்திவைக்கும்படி ஆஸ்திரேலேயி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இருந்தபோதும், இவர்களது மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். ஆனால், எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
விசாரணையின்போது, குறைவான தண்டனை வழங்க வேண்டுமென்றால் லஞ்சம் தர வேண்டுமென இந்தோனேஷிய நீதிபதிகள் கேட்டதாக, இந்த வருடத் துவக்கத்தில் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் அரசியல் தலையீடோ, லஞ்சம் தொடர்பான பேச்சுவார்த்தையோ நடக்கவில்லையென இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஒருவர் மறுத்திருக்கிறார்.
சான், சுகுமாரன் உள்ளிட்ட 9 பேர் 2005ஆம் ஆண்டில் பாலியில் கைதுசெய்யப்பட்டனர். 8.3 கிலோ ஹெராயினை இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் சானும் சுகுமாரனும்தான் இந்தக் கும்பலின் தலைவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9 பேரில் மீதமிருக்கும் மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தும் குற்றத்திற்கு உலகில் மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று.
மயூரனின் இறுதி தருணங்களை எண்ணி தாயார் கண்ணீர்
எனது மகனை மீண்டும் பார்க்க வேண்டும் இன்று இரவு எனது மகனுக்கு மரண தண்டனை வழங்கிவிடுவார்கள் அவன் ஆரோக்கியமானவன், அழகானவன், அதேபோல் மக்கள் மீது அதிக இரக்க சுபாவம் கொண்டவன், எனது மகனுக்கு மரண தண்டனை வழங்காதீர்கள் என நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி அவர்களே எனது மகனை இன்று கொலை செய்யாதீர்கள். மகனுடைய மரண தண்டனையை இரத்து செய்யுங்கள் என மிக உருக்கமாக கண்ணீர் மல்கி மயூரனின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சகோதரியின் உருக்கமான கதறல்
தயவு செய்து எனது சகோதரனை கொலை செய்யாதீர்கள். ஜனாதிபதி அவர்களே தயவு செய்து எனது சகோதரனை கொலை செய்யாதீர்கள் நான் இதனை பிச்சையாக கேட்கிறேன். எனது சகோதரனை என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள் என மயூரனின் சகோதரி மிகவும் இரைந்து கேட்டு கொண்டுள்ளார்.
எனது மகனை மீண்டும் பார்க்க வேண்டும் இன்று இரவு எனது மகனுக்கு மரண தண்டனை வழங்கிவிடுவார்கள் அவன் ஆரோக்கியமானவன், அழகானவன், அதேபோல் மக்கள் மீது அதிக இரக்க சுபாவம் கொண்டவன், எனது மகனுக்கு மரண தண்டனை வழங்காதீர்கள் என நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி அவர்களே எனது மகனை இன்று கொலை செய்யாதீர்கள். மகனுடைய மரண தண்டனையை இரத்து செய்யுங்கள் என மிக உருக்கமாக மயூரனின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கான பேழைகள் தயார் செய்யப்படுவதை படத்தில் காண்கிறீர்கள்.
மயூரனின் சகோதரனின் உருக்கமான கருத்து
நான் மேலும் வலுவடைய போகிறேன் என்னையும் மற்றைய ஏழு பேரையும் ஆண்ட்ரூ பார்த்துக்கொள்வார். மேரி ஜேன் மற்றும் அவரது குடும்பம் குறித்து தான் மிகவும் கவலையாக உள்ளது என மயூரன் என்னிடம் தெரிவித்தான்.
அதேபோல் இறுதி நொடிப்பொழுதில் ஜனாதிபதி குறித்த 8 பேரின் குடும்ப அங்கத்தவர்களின் அன்பு மற்றும் தனி நபர்கள் எவ்வாறு அன்பு செய்கின்றார் என்பவற்றை கருத்தில் கொண்டு கருணை காட்டுவார் என அவன் இன்னமும் நம்புகிறான் என அவரது சகோதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மரணதண்டனையை கண்டித்து ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என அதன் செயலாளர் ஜக்லன்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எவ்வித சட்ட சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் ஏ.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.