கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார்.
அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்தநிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், பால்டிமோர் நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கண்ணில் தென்படும் பொலிசார் வாகனங்களை அடித்து நொறுக்குகின்றனர். இதில் பொலிசார் பலரும் படுகாயமடைந்துள்ளனர். வணிக வளாகங்கள் தீ வைக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன.
இது போன்று மற்றவர்களுடன் இணைந்து வன்முறையில் ஈடுபடும் நோக்கத்துடன் கருப்பு நிற உடையணிந்து முகத்தையும் மறைத்தப்படி தயாராக இருக்கும் இளைஞர் ஒருவரை, ’இப்போ இங்கியிருந்து போரியா இல்லையா’ என்று கூறியப்படி அவரின் தாய் அந்த இளைஞரை அடித்து இழுத்து செல்லும் விடியோ காட்சி வெளியாகி பலரையும் ஆச்சிரியப்பவைத்துள்ளது.
கறுப்பின மக்கள் பொலிசாரால் கொல்லப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையிலும், வன்முறையில் ஈடுபட முயற்சித்த தன் மகனை கண்டிக்கும் இந்த கருப்பின தாய்யின் செயலுக்கு உலகம் முழுவது பாராட்டுகள் குவிந்து வருகிறது.