சென்னை: காதலர் ஜெய்சங்கரைப் பிரிந்து விட்டதாக ஜெய்சங்கரின் மனைவி சுமித்ராவிடம் நடிகை அல்போன்சா கூறுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது.
நடிகை அல்போன்சா 1995-ம் ஆண்டு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தில் ‘‘ரா… ரா… ராமையா” பாடலுக்கு நடனம் ஆடி தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நாடோடி மன்னன், ரட்சகன், பத்ரி, தில் உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடனமாடினார்.
திரை உலகில் முன்னேறிக் கொண்டு இருந்த போதே நடிகர் ஒருவரை காதலித்தார் அல்போன்சா. ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்ததால் அல்போன்சாவும் கடந்த 2012-ம் ஆண்டு தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.01-1430484775-alphonsa-s-10-600
அல்போன்சா மீது புகார்… இந்நிலையில் சமீபத்தில் அல்போன்சாவும், ஜெய்சங்கர் என்ற இளைஞரும் இணைந்து இருப்பது போன்ற வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண் சென்னை வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
01-1430484800-alphonsa-s2-600

கணவரை மீட்டுத் தாருங்கள்… அதில், ‘‘நடிகை அல்போன்சாவுடன் இருக்கும் ஜெய்சங்கர் எனது கணவர். அவரை நடிகையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள்” என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து கமிஷனர் அலுவலக பெண் அதிகாரிகள் சுமித்ராவை நேரில் வர வழைத்து முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள்.01-1430484821-alphonsa-s1-6600

தலைமறைவு…
இது தொடர்பாக நடிகை அல்போன்சாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அல்போன்சா தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
01-1430484852-alphonsa-1-600

வாட்ஸ் அப் ஆடியோ…
இந்நிலையில் நடிகை அல்போன்சா பேசியதாக வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சுமித்ராவின் உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் அல்போன்சா அனுப்பியது எனக் கூறப்படுகிறது.
01-1430484879-alphonsa-s0-600

நாஸ்தியான வாழ்க்கை…
அந்த ஆடியோவில் அல்போன்சா கூறியிருப்பதாவது:- நான் அல்போன்சா பேசுகிறேன். ஜெய்சங்கருடன் வாழும் பெண் நான்தான். தற்போது ஜெய்சங்கருடன் வாழ விருப்பம் இல்லை. நான் ஏமாந்து இருக்கிறேன். ரொம்ப நம்பி ஏமாந்திருக்கிறேன். எனது வாழ்க்கை நாஸ்தியான வாழ்க்கை.
01-1430484906-alphonsa

செத்துப் போன காதல்…
என் பாய்பிரண்ட் என்றால் எனக்கு உயிர். அவர்தான் எல்லாமே என்று இருந்தேன். அந்த காதல் செத்து விட்டது. அன்பைத் தேடி தேடி அலைந்தேன். அப்போதுதான் ஜெய்சங்கரிடம் என் வாழ்க்கையை கொடுத்தேன். அவர் 8 வருடம் காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டார். அவள் ஒரிஜினல் இல்லை என்று என்னிடம் கூறினார்.
01-1430484935-alphonsa34-600

பிரிந்து விட்டேன்…
முதலில் என்னைத்தான் ஜெய்சங்கர் திருமணம் செய்தார். இந்த திருமணம் துபாயில் வைத்து நடந்தது. தற்போது நான் ஜெய்சங்கரை விட்டு வெளியே வந்து விட்டேன்.01-1430484972-alphonsa-01-600

சுமித்ராவுடன் வாழட்டும்…சாரி அக்கா நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டேன். ஜெய்சங்கரை தற்போது விட்டு விட்டேன். அவர் சுமித்ராவை அதிகமாக காதலித்து வருகிறார். சுமித்ராவுடன் அவரை வாழ வையுங்கள்’ என கண்ணீருடன் பேசுகிறது அந்தக் குரல்.
Share.
Leave A Reply