வேலூர்: தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் 20 வயதான கங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கங்கா, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் கங்காவுக்கு ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி திருமணம் செய்யாமல் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கங்கா கோவிலுக்கு சென்று வரும் வழியில் வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கள்ளக்காதலனுக்கு தெரியாமல் கங்கா அவருடன் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தும் வந்துள்ளார்.
இந்த விவகாரம் கள்ளக்காதலனுக்கு தெரிய வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த அவரும், கங்காவிடம் சண்டைப் போட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து, கேட்க ஆள் இல்லாத காரணத்தால் கங்கா புதிய கள்ளக்காதலனோடு கைகோர்த்து கொண்டு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்து உள்ளார்.
புதிய கள்ளக்காதலனுக்கு, கங்காவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைத்தும் தெரிய வந்திருக்கிறது. இதை அவர், தனது நண்பர்களிடம் கூற இருக்கிறார்.
உடனே அவர்கள் கங்காவை தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு சம்மதம் தெரிவித்த புதிய கள்ளக்காதலன், தனது நண்பர்களுக்கு கங்காவை இரையாக்க நினைத்து அவரிடம் நைசாக பேசி காட்பாடி அடுத்த வள்ளிமலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கங்காவை அழைத்து சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
இதை நம்பி கங்காவும் அவரது ஆசைக்கு இணங்க சம்மதம் தெரிவித்து அவருடன் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த புதிய கள்ளக்காதலனின் நண்பர்கள் 10 பேர் கொண்ட ஒரு கும்பல் கங்காவை சுற்றி வளைத்து உள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த கங்கா, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும், தன்னை காப்பாற்ற சொல்லி கத்தி கூச்சலிட்டும் உள்ளார்.
உடனே அந்த கும்பல், அவருடைய வாயை பொத்திய ஒரு மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு, அந்த 10 பேரும் கங்காவை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களின் ஆசை தீர்ந்ததும், கங்காவை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. அதன்பின், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த கங்காவின் அலறல் சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, கங்கா சீரழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கங்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரண நடத்தினர். மேலும், கங்காவை சீரழித்துவிட்டு தப்பியோடிய 10 பேர் கொண்ட கும்பலை உடனடியாக பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.